பகையை மறந்த தோனி, ரெய்னா.. லண்டனில் சந்தித்து புகைப்படம்.. சிஎஸ்கே வருகிறார் சின்ன தல
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசியது.
Recommended Video
கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின், கங்குலி, தோனி, ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் வந்து போட்டியை கண்டு களித்தனர்.
இதில், அனைவரின் கண்களும் சென்றது தோனி, ரெய்னா மீது தான். அவர்கள் இருவரும் சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

தோனி ரெய்னா விரிசல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு பிறகு அடுத்த கேப்டன் என்ற நிலையில் இருந்தவர் ரெய்னா. அனால் 2020 ஆம் ஆண்டு, துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது ரெய்னா தொடரை விட்டு விலகினார். இதனால் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அடுத்த சீசனில் ரெய்னா சிஎஸ்கே அணிக்கு களமிறங்கினார்.

தோனி முடிவு
ஆனால், அதன் பிறகு ரெய்னா ஒரு சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. இதனால் அணியை விட்டு ரெய்னா நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மெகா ஏலத்தில் ரெய்னாவை சிஎஸ்கே அணி தேர்வு செய்யாமல் கைக் கழுவி விட்டது. இதனால் தோனிக்கும், ரெய்னாவுக்கும் ஏற்பட்ட விரிசல் உறுதியாகிவிட்டது.

பிறந்தநாள் வாழ்த்து
இந்த நிலையில், ரெய்னாவின் தந்தை இறந்த போது கூட, தோனி வந்து சந்திக்கவில்லை. இதன் பின், ஜடேஜாவை வைத்து கேப்டனாக தோனி காய் நகர்த்த, அது தற்போது தோல்வியில் முடிவடைந்து. தற்போது ஜடேஜாவுக்கும், தோனிக்கும் விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் தான் தோனியின் பிறந்தநாளுக்கு ரெய்னா தனது சகோதரர் என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

சிஎஸ்கே வருகை
தற்போது தோனி லண்டனில் இருந்த நிலையில், ரெய்னாவும் அங்கு சென்று சந்தித்துள்ளார். இதன் மூலம் இருவருக்கும் இடையே இருந்த மன கசப்பு முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு ரெய்னா மீண்டும் வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட்டின் ராமன், லட்சுமணனாக இருந்த தோனி, ரெய்னா மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்சசியை தந்துள்ளது.


Click it and Unblock the Notifications