Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் ஓய்வு அறிவிப்பு... கோலி நெகிழ்ச்சி.. சிரம் தாழ்ந்த மரியாதை செலுத்துவதாக பதிவு

மும்பை : முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.

Recommended Video

Dhoni Retirement: கண்கலங்கிய ரசிகர்கள்

அவருடைய ஓய்வு குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிபூர்வமாக கேப்டன் விராட் கோலி பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, தோனியின் ஓய்வு குறித்து அவரது மனைவி சாக்ஷி தோனியும் தன்னுடைய ரியாக்ஷனை வெளியிட்டுள்ளார்.

விராட் கோலி உணர்ச்சிவசம்

விராட் கோலி உணர்ச்சிவசம்

முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். இந்நிலையில் கேட்பன் விராட் கோலி இன்ஸ்டாகிராம் மூலமாக தோனி குறித்து உணர்ச்சிப்பூர்வ பதிவினை வெளியிட்டுள்ளார். தோனிக்கு தன்னுடைய சிரம் தாழ்ந்த மரியாதையை செலுத்துவதாக அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நினைவுகளில் நீங்காத இடம்

நினைவுகளில் நீங்காத இடம்

அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ஒருநாள் தன்னுடைய பயணத்தை முடித்தாகத்தான் வேண்டும். ஆனால் மனதிற்கு நெருக்கமானவர்கள் இத்தகைய முடிவை எடுக்கும்போது நமக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று விராட் தெரிவித்துள்ளார். இந்த நாட்டிற்காக தோனி செய்துள்ள சாதனைகள் அனைவரின் நினைவுகளிலும் நீங்காத இடத்தை அவருக்கு அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

நான் மனிதனை பார்ப்பேன்

நான் மனிதனை பார்ப்பேன்

ஆனால் சக வீரராக தோனி கொடுத்த மரியாதை, அரவணைப்பு தன்னுள் நீங்காமல் இருக்கும் என்றும் கோலி கூறியுள்ளார். தொடர்ந்து இந்த உலகம் சாதனைகளை மட்டுமே பார்க்கும், ஆனால் தான் மனிதனை மட்டுமே பார்ப்பதாகவும், தோனி தனக்கு அளித்த அனைத்திற்கும் நன்றி என்றும் அவர் கூறியுள்ளார். தோனியுடன் தான் இணைந்திருக்கும் புகைப்படங்களையும் கோலி இணைத்துள்ளார்.

லவ் உள்ளிட்ட எமோஜிகள்

லவ் உள்ளிட்ட எமோஜிகள்

தன்னுடைய ஓய்வு தோனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ள நிலையில், அவரது மனைவி சாக்ஷி தோனி, லவ் மற்றும் கைகூப்பியபடி இருக்கும் எமோஜிகளை கமெண்ட்டில் தெரிவித்துள்ளார். இதனிடையே, அடுத்த மாதம் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணி சார்பில் கேப்டன் தோனி பங்கேற்று விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

Story first published: Saturday, August 15, 2020, 23:12 [IST]
Other articles published on Aug 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+