Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பகவத் கீதை படி தான் தோனி வாழ்கிறார்.. கிரிக்கெட்டிலும் அப்படி தான் நடிக்கிறார்.. ஸ்ரீதர் கருத்து

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி களத்திலும், களத்திற்கு வெளியிலும் எப்போதும் ஒரு கொள்கையுடன் வாழ்பவர். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி இருக்கும். ஒரு சிலர் உழைத்தால் போதும் என்று சொல்வார்கள்.

இன்னொரு சிலர் வெற்றியை நோக்கி ஓட வேண்டும் என்று கூறுவார்கள்.இன்னும் சிலர் வெற்றி பெறுவது மட்டுமே குறிகோள் என்று கூறுவார்கள். ஆனால் முதன்முதலாக வெற்றியை எப்படி பெற வேண்டும் என்று சாதாரண குழந்தைக்கு கூட புரியும் வகையில் சொல்லிக் கொடுத்தவர்தான் தோனி. வாழ்க்கையில் வெற்றியை நோக்கி ஓடாதீர்கள்.

ms dhoni cricket

பயிற்சி என்ற பயணத்தை சரியாக செய்தாலே வெற்றி உங்களுக்கு பரிசாக கிடைக்கும் என்று தோனி அடிக்கடி கூறுவார். அதாவது ஆங்கிலத்தில் ப்ராசஸ் என்று சொல்வார்கள். வெற்றிக்கான தேவையான விஷயத்தை சரியாக தொடர்ந்து செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதுதான் தோனியின் ஸ்டைல். இப்படி தோனி தன் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடத்தை அறிவுரைகளாக கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆன ஸ்ரீதர், பகவத் கீதை வழிப்படையே தோனி நடப்பதாக கூறியிருக்கிறார். இது குறித்து தனது புத்தகத்தின் தோனியை பற்றி பாராட்டி ஸ்ரீதர் எழுதி இருக்கிறார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்ரீதர், நான் தோனி குறித்து என் புத்தகத்தில் எழுதியதெல்லாம் என்னுடைய தனிப்பட்ட கருத்துதான். தோனியை நான் நீண்ட காலமாக பார்த்து வருகிறேன்.தோனி ஒரு நல்ல நண்பராகவும், ஒரு நல்ல வீரராகவும் விளங்கினார்.

ஒரு தலைவனாக அணியை தோனி நன்றாக வழி நடத்துவார். இளம் வீரருடன் பேசுவார். தோனியிடமிருந்து நீங்கள் பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். தற்போதெல்லாம் நான் பகவத் கீதையை மிகவும் ஆழ்ந்து படித்து வருகின்றேன். நான் படிக்கும்போது தான் தெரிகிறது பகவத் கீதையில் வரும் விஷயங்களை தோனி தன் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி ஒரு தலைவனாக அணியை வழிநடத்தி இருக்கிறார் என்று எனக்குப் புரிந்தது.

தோனியின் வாழ்க்கையின் பகவத் கீதையில் உள்ள விஷயங்களும் ஒன்றோடு ஒற்றுப் போய் இருக்கிறது. பகவத் கீதை சொன்ன நல்ல விஷயங்களை தோனி கிரிக்கெட் களத்தில் நடைமுறைப்படுத்தி காட்டியிருக்கிறார் என்று ஸ்ரீதர் கூறியிருக்கிறார். ஸ்ரீதர் மட்டுமல்ல பலரும் தோனியின் கிரிக்கெட் ஸ்டைலை பகவத் கீதையுடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார்கள். பகவத் கீதையில் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். மேலும் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே. இதைதான் தோனி தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் வெற்றியை எதிர்பார்த்து சோர்வடையாமல் வெற்றிக்குத் தேவையான விஷயத்தை சரியாக அணுகி தொடர்ந்து உழைத்தால் நிச்சயம் அந்த வெற்றி என்பது கிடைக்கும் என்பதுதான் தோனியின் ஸ்டைல்.

Story first published: Wednesday, September 4, 2024, 23:03 [IST]
Other articles published on Sep 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+