For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியிடம் கெஞ்சிய ரசிகர்கள்.. கொஞ்சம் கூட காதில் வாங்காமல் சென்ற தல.. ஏன் திடீர் கோபம்- வீடியோ

ராஞ்சி : ரசிகர்களை மதிப்பதில் தோனி எப்போதுமே நல்லவர். ரசிகர்களுக்காக தான் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுகிறேன் என்று கூறும் தோனி ரசிகர்கள் எது கேட்டாலும் அதனை செய்து தருவார்.

உதாரணத்திற்கு ஐபிஎல் போட்டியின் போது ரசிகர் ஒருவர் மைதானத்திற்கு உள்ளே புகுந்து தோனியை பிடிக்க முயன்றார். அப்போது பாதுகாவலர்கள் அந்த ரசிகர்களை அழைத்து சென்று அடித்தனர். இதனை அறிந்த தோனி அந்த ரசிகர்களிடம் சென்று உங்களுக்கு தேவையான உதவியை நான் செய்கின்றேன் கவலைப்படாதீர்கள் என்று கூறினார்

cricket india cricket team ms dhoni

இதை போல் தோனி செய்த பல நன்மைகள் ஏராளம். இந்த நிலையில் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறிவிட்டது. இது தோனிக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய மன உளைச்சலை கொடுத்திருக்கிறது. இதன் பிறகு தோனி பெரிய அளவில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.

வழக்கம்போல் தன்னுடைய ராஞ்சி சொகுசு பங்களாவிற்கு சென்று தங்கி இருக்கும் தோனி ஓய்வு நேரத்தில் பைக்கில் பயணம் செய்து வருகிறார். தோனி இப்படி எங்கே வெளியே சென்றாலும் அவர்களுடைய ரசிகர்கள் அவரை பின் தொடர்வார்கள். அப்போது தோனியிடம் பலரும் செல்பி கேட்பார்கள். இதில் கொஞ்சம் கூட தயங்காத தோனி எவ்வளவு நேரம் செலவானாலும் ரசிகர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டுதான் செல்வார்.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டிக்கு பிறகு தோனி முற்றிலுமாக மாறிவிட்டார் என தெரிகிறது. நேற்று தோனியின் வீட்டின் முன்பு காத்திருந்த ரசிகர்கள் தோனி பைக்கில் இருந்து வீட்டுக்குள் வருவதை கண்டு கொண்டனர். அப்போது தோனியிடம் சென்று ஒரு செல்பி வேண்டும் என்று கெஞ்சினர். ஆனால் தோனி அந்த ரசிகர்களை கண்டு கொள்ளவே இல்லை. அந்த ரசிகர்களும் விடாப்பிடியாக தோனியிடம் செல்போனை நீட்டிக்கொண்டு தோனி அருகே சென்றனர்.

ஆனால் தோனி வேண்டாம் என்று தலையை ஆட்டிக் கொண்டு அந்த ரசிகர்கள் பக்கமே திரும்பாமல் வீட்டின் கதவை காவலாளி திறந்தவுடன் சல்லென்று பைக்கில் பறந்தார். இதனால் அங்கு காத்திருந்த தோனி ரசிகர்கள் சோகமடைந்தனர். எப்போதுமே செல்பி கேட்டால் அதனை எடுக்க அனுமதி தரும் தோனி ஏன் இப்படி கோபமாக இருக்கிறார் என்று ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் கேள்வி கேட்டு வருகின்றனர். ஐபிஎல் தோல்வி தோனியின் மனதை பாதிக்க செய்ததா என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Story first published: Saturday, June 22, 2024, 17:04 [IST]
Other articles published on Jun 22, 2024
English summary
MS Dhoni avoids fans request to take selfie and angrily went in bike தோனியிடம் கெஞ்சிய ரசிகர்கள்.. கொஞ்சம் கூட காதில் வாங்காமல் சென்ற தல.. ஏன் திடீர் கோபம்- வீடியோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+