Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிக்கு பிடித்த பைக் வகைகள்.. தோனியிடம் இருக்கும் பைக்குகளின் விலை தெரியுமா? HBD Dhoni

ராஞ்சி : தமிழகத்தின் தத்துப் பிள்ளையான மகேந்திர சிங் தோனியின் 42 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் தோனிக்கு கிரிக்கெட் ,ராணுவம் ஆகியவற்றைத் தவிர பைக்குகள் மீது தீராத காதல் இருக்கிறது.

சிறுவயதில் முதலில் இருந்தே நண்பர்களிடம் பைக்கை வாங்கி அதனை ஓட்டி பார்ப்பது தான் தோனியின் பழக்கம். கிரிக்கெட்டில் இருந்து வரும் பணத்தை முதலில் தோனி செய்வது பைக்கை வாங்குவது தான்.

 MS Dhoni bike collection list and price full details

இந்த செய்தி தொகுப்பில் தோனியிடம் இருக்கும் பைக் வகைகள் என்ன அதன் மதிப்பு என்ன என்பதை தான் பார்க்கப் போகிறோம். தோனிக்கு மிகவும் பிடித்த பைக்குகளில் கவாஸ்கி நிஞ்சா ஹச் டி மாடல் முதலிடத்தில் இருக்கிறது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 34 லட்சம் ஆகும். அதன் பிறகு கான்ஃபிடிரேட் x132 ஹெல்கேட் என்ற பைக் தோனி இடம் உள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 47 லட்சமாகும்.

இதேபோன்று கவாஸ்கி நிஞ்சா இசட் எக்ஸ் 14 ஆர் என்ற பைக் வகை தோனியிடம் இருக்கிறது. இதன் மதிப்பு 19 லட்சம் ரூபாயாகும். தோனிக்கு மிகவும் பிடித்த பைக்குகளில் ஹார்லி டேவிட்சன் பேட் பாய் என்ற மாடல் உள்ளது. இதன் மதிப்பு 17 லட்சம் ரூபாயாகும். தோனிக்கு மிகவும் மனதில் நெருக்கமான பைக் என்றால் ducati1098. இதன் மதிப்பு சுமார் 25 முதல் 30 லட்சம் ரூபாய் ஆகும்.

அதன் பிறகு தோனியிடம் யமஹா ஆர் டி 350 பைக் இருக்கிறது. இதன் விலை 30 ஆயிரம் ரூபாய் ஆகும். இதே போன்று யமஹா ராஜ் துட் என்ற பைக்கும் இருக்கிறது. இதன் மதிப்பு 80 ஆயிரம் ரூபாய் ஆகும். இதேபோன்று சுசுகி சுகன் என்ற பைக்கும் தோனிக்கு பிடிக்கும். இதன் விலை 18,000 ரூபாய் ஆகும்.

இதேபோன்று யமஹாவின் தண்டர்கேட் பைக் தோனிக்கு மிகவும் பிடிக்கும். இதன் விலை 15 லட்சம் ரூபாய் ஆகும். நோட்டன் ஜூலி 250 என்ற மூன்று லட்சம் மதிப்பிலான பைக்கும், டிவிஎஸ் அப்பாச்சி ஆர் ஆர் 310 என்று மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான பைக்கும் தோனியிடம் இருக்கிறது. இதேபோன்று பிஎஸ்சி கோல்ட் ஸ்டார் என்ற பைக்கும் தோனியிடம் இருக்கிறது.இதன் மதிப்பு 5 லட்சம் ரூபாயாகும்.

Story first published: Friday, July 7, 2023, 6:30 [IST]
Other articles published on Jul 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+