Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹேப்பி பர்த்டே மஹி.. நள்ளிரவில் கேக் வெட்டிய தோனி.. ரிஷப் பண்ட் பங்கேற்பு.. மனைவி பகிர்ந்த வீடியோ!

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது 41வது பிறந்தநாளை லண்டனில் கொண்டாடினார்.

தனது மனைவி, குழந்தைகளுடன் இங்கிலாந்துக்கு சென்ற தோனி, அங்கு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் நண்பர்களுடன் கண்டு களித்தார்.

இதனையடுத்து தோனி இன்று தனது குடும்பத்தாருடன், நண்பர்களுடன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

MS Dhoni birthday 41st celebration video attracts fans

தோனியின் பிறந்தநாள் விழாவில் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பங்கேற்று, வாழ்த்து தெரிவித்தார். தோனி திரையில் பின்னால் மறைந்திருந்த தோனி, கேக்கில் இருக்கும் மெழுகுவர்த்தியை அணைத்து பின்னர் கேக் வெட்டி கொண்டாடினார். ஹாப்பி பர்த் டே மஹி என்று ஷாக்சி , தனது கணவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறினார்.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் தோனியின் ரசிகர்கள், நேற்று இரவு முதலேயே, அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர். தோனி ரசிகர்கள் சினிமா பாடல்களுக்கு தோனியின் கிரிக்கெட் ஷாட்களை தொகுத்து வீடியோக்களை தயார் செய்து தங்களது வாட்ஸ் ஆப் ஸ்டேட்ஷ்களில் வைத்து வருகின்றனர்.

நடிகர் விஜய், அஜித் பிறந்தநாளைக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு தோனி ரசிகர்கள், பர்த்டே காமன் டிபியை வைத்துள்ளனர். தற்போது 41 வயதான தோனி ஏற்கனவே மூட்டு வலியால் அவதிப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். தற்போது அடுத்த வருடமும் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக தோனி திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 7, 2022, 11:17 [IST]
Other articles published on Jul 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+