For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

MS Dhoni birthday - 43வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. வாழ்க்கையில் வெற்றி பெற தோனியின் பாடங்கள் என்ன?

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன், மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த மிகப்பெரிய தலைவன் என பல பெருமைகளை கொண்ட மகேந்திர சிங் தோனியின் 43-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்று வரை அவருக்கான ரசிகர்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி உயிரை கொடுத்து விளையாடுவதன் மூலம் தமிழ்நாட்டின் தத்துப் பிள்ளையாகவே மாறிவிட்டார். இந்த நிலையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து ரயில்வேயில் ஊழியராக பணிபுரிந்து பல்வேறு அவமானங்களை கடந்து எப்படி தோனி வாழ்க்கையில் சிறந்த விளங்கினார் என்று நமக்குத் தெரியும்.

MS Dhoni ms dhoni birthday

இந்த நிலையில் தோனியை போல் நாமும் வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். அவர் பின்பற்றிய பாடங்கள் என்ன என்பதைத்தான் தற்போது நாம் பார்க்க இருக்கின்றோம். நம் அனைவரும் வெற்றி பெற முடியவில்லை. நாம் இவ்வளவு முயற்சி செய்தும் வெற்றி கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டு இருப்போம். காலப்போக்கில் வெற்றி கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில், நாம் செய்யும் முயற்சிகளை கைவிட்டு விடுவோம்.

இதுதான் நமது தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கும். இதில் தான் தோனி கொஞ்சம் வித்தியாசமாக மாறுபட்டு இருக்கிறார். எனக்கு வெற்றி தோல்வி என்ற முடிவு முக்கியம் இல்லை. நான் செய்யும் விஷயத்தை சரியாக தொடர்ந்து செய்தால் நிச்சயம் நமக்கு வெற்றி கிடைக்கும் என்பதுதான் தோனியின் தாரக மந்திரம். Trust the Process என்ற ஃபார்முலாவை தோனி இன்றும் பின் தொடர்ந்து வருகிறார்.

தொடர்ந்து ஒரு விஷயத்தை நாம் செய்யும் போது நிச்சயம் அதற்கான பலன் நம்மை வந்து சேரும் என்பது தான் இதன் அர்த்தம்.அதே சமயம் நாம் செய்யும் விஷயத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் அடையவில்லை என்றால், நாம் ஏதோ ஒரு தவறு செய்கிறோம் என்று அர்த்தம். அதனால் காலத்திற்கு ஏற்ப நாம் என்ன மாறுதல் செய்ய வேண்டும். என்ன தவறு செய்கின்றோம்? எங்கே கோட்டை விடுகிறோம் என்பதையும் பார்த்து அதனை திருத்திக் கொண்டு செய்ய வேண்டும்.

தோனியின் அடுத்த வெற்றியின் மந்திரம் "உங்களுடைய உள்ளுணர்வை பின் தொடருங்கள்". எப்போதுமே நமது மனது நம்மிடம் பொய் சொல்லாது. பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு சமயங்களில் நமது உள்ளுணர்வு இதை செய்யாதே என்று நமக்கே பாடம் நடத்தும். ஆனால் பெரும்பாலானோர் அதைக் கேட்பதில்லை. ஆனால் தோனி என்றுமே உள்ளுணர்வை நம்பக்கூடியவர்.

கிரிக்கெட் களத்தில் எதிரணியை தோனி ஏன் நெருக்கடிக்கு ஆளாக்குகிறார் என்றால் அவர் அவருடைய உள்ளுணர்வை நம்புகிறார். எதிரணி வீரரை முடக்க இந்த பிளானை தான் அணி தயார் செய்து இருக்கிறது என்று அதையே நம்பாமல் பிளான் பி, பிளான் சி என தன்னுடைய உள்ளுணர்வை நம்பி தோனி காய் நகர்த்துவார். இதனால் தான் தோனி கிரிக்கெட் களத்தில் வெற்றியாளராக இருக்கின்றார்.

உதாரணத்திற்கு 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் முரளிதரன் பந்து வீசப் போகிறார். அவரை எதிர்கொள்ள இடதுகை பேட்ஸ்மேனான யுவராஜ் க்கு தடுமாற்றம் இருக்கும்.எனவே அதனை சமாளிக்க நான் செல்கின்றேன் என்ற அவருடைய உள்ளுணர்வு தான் அன்று இந்தியா வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தது. இப்படி நம் வாழ்க்கையிலும் உள்ளுணர்வை நம்பி உழைக்க வேண்டும்.

தோனியின் வெற்றி ரகசியத்திற்கு மூன்றாவது முக்கிய காரணம் உங்களுக்கு ஒரு வெற்றி கிடைத்து விட்டால், அது நம்முடைய குறைகளை மறைத்து விடாது என்பதுதான். அதாவது ஒரு போட்டியில் எப்படியும் நாம் வெற்றி பெற்றுவிட்டாலும், அது தான் வெற்றி கிடைத்துவிட்டதே? இனி என்ன என்று நினைக்காமல், இந்த போட்டியில் நாம் என்ன தவறு செய்தோம். எந்த விஷயங்களில் சறுக்கினோம் என்பதை ஆராய்ந்து பின் அதற்காக உழைக்க வேண்டும்.

இதை தோனி ஒவ்வொரு வெற்றிக்கு பிறகும் செய்து வந்ததால், தான் அவர் இன்று வரலாற்றில் சிறந்த கேப்டன் என்ற பெயரை பெற்றிருக்கிறார். இதே போல் தோனியின் வெற்றிக்கு மிகவும் முக்கிய காரணமாக இருந்தது," Expect the unexpected" அதாவது எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதுதான். ஒரு விஷயம் நிச்சயம் நடக்காது என நினைத்து, நாம் எதை விடுகிறோமோ அதுதான் நமக்கு பெரிய சவாலை பின்னால் கொடுக்கும்.

எனவே அனைத்துக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். இதை தான் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையின் போது தோனி செய்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அப்போதுதான் சூப்பர் ஓவர் வந்த பிறகு பவுல் அவுட் என்ற முறை கொண்டுவரப்பட்டது. இப்படி ஒரு விதி இருக்கிறது என்று தெரிந்த தோனி, தன்னுடைய வீரர்களை அழைத்து சூப்பர் ஓவருக்கும் பயிற்சி செய்யுங்கள் என்று முன்பே கூறி இருந்திருக்கிறார்.ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் சூப்பர் ஓவர் முறை பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கடைபிடிக்கப்பட்ட போது, பாகிஸ்தான் கேப்டன் சூப்பர் ஓவரா அப்படி என்றால் என்ன என்று கேட்க? தோனி ஏற்கனவே பயிற்சி செய்ததை களத்தில் நடத்திக் காட்டினார்.

இதேபோன்று தோனி கிரிக்கெட்டுக்கு பிறகும் தற்போது வெற்றிகரமாக இருப்பதற்கு முக்கிய காரணம் அவர் தன்னுடைய பொருளாதாரத்தை தன்னுடைய எதிர்காலத்தை எப்படி வாழப் போகிறோம் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு இருக்கிறார். கிரிக்கெட்டை மட்டும் நம்பாமல் விவசாயம் , தொழில் நிறுவனம் என பல்வேறு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கிரிக்கெட் ஒரு காலத்திற்குப் பிறகு கை கொடுக்காது என்பதை புரிந்து கொண்ட தோனி ஓய்வுக்கு முன்பு பல தொழிலில் முதலீடு செய்து தற்போது வெற்றிகரமான ஒரு தொழில் முனைவராகவும் விளங்கி வருகின்றார்.

தோனியிடம் அனைவருக்கும் பிடித்தது எப்போதும் தன்னுடைய எமோஷனை வெளியே காட்டிக் கொள்ளாமல் கூலாக இருப்பது தான். அதாவது எப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தாலும் பதற்றம் அடையாமல் இந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சரியாக யோசித்தாலே, வெற்றி கிடைக்கும். இதை தான் தோனி காலம் காலமாக செய்திருக்கிறார். தோனியின் இந்த வாழ்க்கை பாடங்களை நாமும் ஓரளவுக்கு செயல்பட்டால் நிச்சயம் நம்மாலும் வெற்றி பெற முடியும். இப்படி பல பாடங்களை சொல்லிக் கொடுத்த தோனிக்கு ரசிகர்கள் சார்பாக மைக்கேல் இணையதளம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றது.

Story first published: Sunday, July 7, 2024, 0:06 [IST]
Other articles published on Jul 7, 2024
English summary
MS Dhoni birthday celebration - Life Lesson of MS Dhoni to be followed for getting success MS Dhoni birthday - 43வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. வாழ்க்கையில் வெற்றி பெற தோனியின் பாடங்கள் என்ன?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+