டாஸ் தோற்றது, 2 நோ பால் போட்டது.. இதுதான் தோல்விக்கு முக்கியக் காரணம்... டோணி
மும்பை: டாஸ் தோற்றது., இரண்டு முக்கியமான நோபால்களைப் போட்டது ஆகியவைதான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று கேப்டன் டோணி கூறியுள்ளார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் இந்தியா தோல்வியுற்றதை ரசிகர்களால் நம்ப முடியவில்லை. இன்னும் கூட அந்த அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் அணியின் தோல்விக்கு டோணி விளக்கம் அளித்துள்ளார்.
2 நோ பால்களும், டாஸ் வெல்லாததுமே இந்தியாவின் தோல்விக்கு முக்கியக் காரணம் என்பது டோணி தரும் விளக்குமாகும். உண்மையும் கூட அதுதான். அஸ்வின் போட்ட நோ பாலும், ஹர்டிக் பாண்ட்யா போட்ட நோ பாலும்தான் லென்டில் சிம்மன்ஸ் அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு இட்டுச் செல்ல முக்கியக் காரணமாகி விட்டது.

18 ரன்னில்
சிம்மன்ஸ் 18 ரன்களில் இருந்தபோது அஸ்வின் வீசி பந்தில் ஜஸ்பிரீத் பும்ராவிடம் அபாரமாக கேட்ச் ஆனார். இதனால் இந்திய வீரர்கள் துள்ளிக் குதித்தனர். ஆனால் அனைவருக்கும் ஷாக் அளிக்கும் வகையில் அந்தப் பந்து நோ பால் ஆகி விட்டது. இதனால் சிமமன்ஸ் தப்பினார்.

50 ரன்களில்
அடுத்து சிம்மன்ஸ் 50 ரன்னில் இருந்தபோது பாண்ட்யா வீசிய பந்தை அடித்து அதை அஸ்வினிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் இப்போது பாண்ட்யா நோபாலாக அதைப் போட்டிருந்தார். மீண்டும் தப்பினார் சிம்மன்ஸ். கடைசியில் ஆட்டமிழக்காமல் 82 ரன்களை விளாசி தனது அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார் சிம்மன்ஸ்.

டோணி வேதனை
போட்டியின் முடிவில் டோணி கூறுகையில் டாஸ் வெல்லாமல் போது முதல் சறுக்கல். மேலும் போட்டி வழக்கத்தை விட அரை மணி நேரம் முன்னதாகவே தொடங்கி விட்டது. பனி காரணமாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான நிலை ஏற்படாமல் போய் விட்டது.

2 நோ பால்கள்
என்னைப் பொறுத்தவரை இதை விட 2 நோ பால்கள்தான் இந்தியாவின் வெற்றியைப் பறித்து விட்டதாக கருதுகிறேன். அந்த பந்துகள் சரியான முறையில் வந்திருந்தால் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

நிலைமை சரியில்லை
நமது சூழ்நிலை சரியில்லை. மிகக் கடினமான சூழல் நிலவியது. நமது பந்து வீச்சிலும் சிக்கல்கள் காணப்பட்டன. எல்லாம் சேர்ந்து வெற்றியை தூக்கிச் சென்று விட்டன என்றார் டோணி.


Click it and Unblock the Notifications