Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணி கேப்டனா இருக்கக் கூடாது.. கோஹ்லி தலைமையில் ஆடனும்... அப்பத்தான் "கப்பு"... ஜோசியர் ஷாக்!

பெங்களூர்: டோணி தலைமையில் இந்தியா டி 20 உலகக்கோப்பைப் போட்டியை ஆடினால் நிச்சயம் நம்மால் கோப்பையை வெல்ல முடியாது. விராத் கோஹ்லி தலைமையில் விளையாடினால்தான் கோப்பைக் கிடைக்கும் என்று கிரீன்ஸ்டோன் லோபோ என்ற ஜோதிடர் கூறியுள்ளார்.

அவர் சொன்ன நேரமோ என்னவோ முதல் போட்டியிலேயே இந்தியா தோல்வியைத் தழுவி விட்டது. இதனால் இந்திய அணியின் கோப்பைக் கனவு தடுமாற்றமாகியுள்ளது.

இன்னும் நமக்கு 3 போட்டிகள் உள்ளன. அந்த மூன்றிலும் நாம் வெற்றி பெற்றால்தான் நல்லது. ஒரு போட்டியில் தோற்றால் கூட கோவிந்தாவாகி விடும் நிலை. இந்த நிலையில்தான் இந்த லோபோவின் ஷாக்கடிக்கும் கணிப்பு வெளியாகியுள்ளது.

டோணி தலைமையால் பயன் இருக்காது

டோணி தலைமையால் பயன் இருக்காது

லோபோ கூறுகையில் டோணி தலைமையில் இந்தியா ஆடினால் நிச்சயம் நமக்குக் கோப்பை கிடைக்காது. அதற்கு வாய்ப்பே இல்லை.

கோஹ்லி தலைமையில் சான்ஸ் உண்டு

கோஹ்லி தலைமையில் சான்ஸ் உண்டு

அதேசமயம், விராத் கோஹ்லியைக் கேப்டனாக்கி அவரது தலைமையில் இந்தியா விளையாடினால் நிச்சயம் நமக்குக் கோப்பை கிடைக்கும்.

இறுதிப் போட்டிக்குப் போனாலும் கூட

இறுதிப் போட்டிக்குப் போனாலும் கூட

டோணி தலைமையில் விளையாடி ஒரு வேளை இறுதிப் போட்டிக்கு முன்னேறினாலும் கூட கோப்பை கிடைக்க வாய்ப்பில்லை. நாம் இறுதிப் போட்டியில் வெல்ல வாய்ப்பில்லை.

கேப்டனை மாற்றினால்

கேப்டனை மாற்றினால்

இறுதிப் போட்டியில் கோஹ்லியைக் கேப்டனாக்கி ஆடினால் நமக்கு வெற்றியும்,கோப்பையும் கிடைக்க நல்ல வாய்ப்புகள் உண்டு.

தென் ஆப்பிரிக்காவுக்கு வாய்ப்பு

ஜோதிடப்படி பார்த்தால் தென் ஆப்பிரிக்காவுக்கு கோப்பையை வெல்லும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. கேப்டன் பாப் டூ பிளஸிஸ் கோப்பையை கையில் ஏந்தும் அதிர்ஷ்டத்துடன் திகழ்கிறார்.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான்

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான்

அதேபோல ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அவர்களும் முயற்சி செய்தால் வெற்றி பெற வாய்ப்புண்டு.

டோணிக்கு இறங்குமுகம்

டோணிக்கு இறங்குமுகம்

டோணியின் வெற்றிப் பயணம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. தற்போது அவருக்கு இறங்குமுகம். எனவே கோஹ்லி கையில் இந்திய அணியை ஒப்படைத்தால் வெற்றியை எதிர்பார்க்கலாம் என்றார் லோபோ.

Story first published: Thursday, March 17, 2016, 14:11 [IST]
Other articles published on Mar 17, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+