மும்பை : இந்தியாவின் தலைசிறந்த கேப்டனான மகேந்திர சிங் தோனி இன்று கேப்டனாக தனது முதல் போட்டியில் விளையாடி 16 ஆண்டுகள் ஆகிறது. தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலக கோப்பையில் அவர் எவ்வாறு செயல்பட்டார் என்பதை கடந்த செய்தி தொகுப்பில் பார்த்தோம்.
இந்த நிலையில் தோனி எத்தனை முறை ஐசிசி உலகக் கோப்பை வென்றிருக்கிறார் என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் ஆண்டு வாரியாக அவர் கேப்டனாக பெரிய தொடரில் எத்தனை முறை வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை தற்போது பார்ப்போம்.

குறிப்பாக தோனி கேப்டனாக இருந்த போது 2010 இல் இருந்து 11 என இரண்டு ஆண்டுகள் அவருடைய பொற்காலமாக இருந்தது. எந்த கேப்டன்ஷிப் அனுபவம் இல்லாமல் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. இதனை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தொடர்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து அதற்கான செங்கோலை பெற்றது.
இந்த காலகட்டத்தில் தான் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் வீழ்த்திய இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்று அங்கு டெஸ்ட் தொடரை பல ஆண்டுகள் கழித்து வென்றது. இதனைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை சிஎஸ்கே அணிக்காக தோனி வென்று கொடுத்தார். இதனை தொடர்ந்து அதே ஆண்டில் சாம்பியன் லீக் டி20 தொடரிலும் சிஎஸ்கே அணிக்காக தோனி கோப்பையை வென்றார்.
இதனை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் பிறகு 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு மீண்டும் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்ததற்காக செங்கோலை வென்றது.
இதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஐ பி எல் கோப்பை தொடர்ந்து இரண்டாவது முறையாக தோனி கைப்பற்றினார். அதன் பிறகு டெஸ்டில் இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் சென்று தோல்வியை தழுவியது. இதன் பின் 2012 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை இந்தியா தவறவிட்டது. இன்னும் 2013 ஆம் ஆண்டு இளம் வீரர்களை வைத்து தோனி இங்கிலாந்துக்கு சென்று 2013 சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றினார்.
மீண்டும் 2014 டி20 உலக கோப்பையில் இறுதி போட்டி வரை இந்திய அணி சென்று இலங்கையிடம் தோல்வியை தழுவியது. எனினும் 2014 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை சிஎஸ்கே அணிக்காக தோனி வென்று கொடுத்தார். இதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையிலும் தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது.
இதன்பின் 2017 ஆம் ஆண்டு இந்திய அணி கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி ராஜினாமா செய்தார். அதன் பின்னர் தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக தோனி கேப்டனாக இருந்தார். அந்த வகையில் 2018 ஐபிஎல் 2021 ஐபிஎல் 2023 ஐபிஎல் என மூன்று கோப்பைகளை சிஎஸ்கே அணிக்காக தோனி வென்று கொடுத்தார்.