மும்பை : தோனி கேப்டன்சி சாதனையை குறித்து ரசிகர்கள் பேச வேண்டும் என்றாலே இந்த வார்த்தையை தான் caption ஆக போடுவார்கள். இது போன்ற ஒரு ரெக்கார்டு வைத்திருந்த இந்திய கேப்டனை காண்பித்தால் உங்களுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் என்பதுதான் அது.ஏனென்றால் இந்திய கிரிக்கெட் இதுவரை பார்த்திராத கேப்டனாக தோனி இருந்தார்.
தோனிக்கு முன்பு இது போல் யாரும் இருந்தது இல்லை. தோனிக்குப் பிறகு யாரும் அவரை போல் வருவதுமில்லை. இந்த நிலையில் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக அடியெடுத்து வைத்த இந்த நாளில் அவர் கேப்டனாக எவ்வாறு செயல்பட்டு இருக்கிறார் என்பதை தற்போது பார்க்கலாம்.

விக்கெட் கீப்பர் கேப்டனாக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர், அதிக டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்த எட்டாவது வீரர் , ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் கேப்டனாக அதிக போட்டிகளில் இருந்தவர், விக்கெட் கீப்பர் கேப்டனாக அதிக போட்டிகளில் விளையாடியவர், t20-யில் அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர், சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் ஒரு நாள் டி20 என அனைத்திலும் சேர்த்து அதிக முறை கேப்டன் ஆக இருந்தவர் என பல ரெக்கார்டுகள் தோனிக்கு இருக்கிறது.
தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் 60 முறை கேப்டன் ஆக செயல்பட்டு இருக்கிறார். இதில் இந்திய அணி 27 போட்டிகளில் வெற்றியும், 18 போட்டிகளில் தோல்வியும் 15 போட்டிகளில் டிராவும் அடைந்திருக்கிறது. இதில் தோனியின் வெற்றி சராசரி 45 சதவீதம் ஆகும். இதே போன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 போட்டிகளில் கேப்டனாக இருந்த தோனி 110 போட்டிகளில் வெற்றியும் 74 போட்டிகளில் தோல்வியும் ஐந்து முறை சமனும் 11 முறை வெற்றி தோல்வி இன்றி ஆட்டமும் முடிந்திருக்கிறது. இதில் தோனியுடைய வெற்றி சராசரி 55 சதவீதமாகும்.
டி20 கிரிக்கெட்டில் 72 போட்டிகளில் கேப்டனாக இருந்த தோனி 41 போட்டிகளில் வெற்றியும் ,28 போட்டிகளில் தோல்வியும் ஒரு முறை சமனும், இரண்டு முறை ஆட்டம் முடிவில்லாமல் கைவிடப்பட்டிருந்திருக்கிறது. இதில் தோனியின் வெற்றி சதவீதம் 56.9% ஆகும். 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனி இதுவரை 22 போட்டிகளில் கேப்டனாக தலைமை தாங்கி இருக்கிறார். இதில் 19 முறை வெற்றியும் இரண்டு போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டி சமனிலும் முடிந்திருக்கிறது. உலகக் கோப்பை போட்டியில் தோனியின் வெற்றி சதவீதம் 86.3 என்ற அளவில் இருக்கிறது.
இதேபோன்று டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் தோனி 38 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 25 போட்டிகளில் வெற்றியும், 11 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டி சமனிலும் ஒரு ஆட்டம் மழையாலும் கைவிடப்பட்டிருக்கிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் 13 முறை கேப்டனாக இருந்துள்ள தோனி 9 போட்டிகளில் வெற்றியும் நான்கு போட்டிகளில் தோல்வியும் என வெற்றி சதவீதம் 69.2 உடன் இருக்கிறார்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தடுமாறும் நிலையில் தோனி 18 ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 11 போட்டியில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கிறார். இதேபோன்று டி20 யில் பாகிஸ்தானுக்கு எதிராக எட்டு போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள தோனி 6 போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியும் தழுவி இருக்கிறார். ஒரு ஆட்டம் சமனில் முடிந்திருக்கிறது.
இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் 14 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேப்டனாக செயல்பட்ட தோனி 8 போட்டிகளில் வெற்றியும் நான்கு போட்டிகளில் தோல்வியும் இரண்டு போட்டிகளில் டிராவும் அடைந்திருக்கிறார்.இதுவே ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 52 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட தோனி 21 போட்டிகளில் வெற்றியும் 26 போட்டிகளில் தோல்வியும் ஐந்து ஆட்டம் மழையாலும் ரத்தாகி இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 17 t20 போட்டியில் கேப்டனாக இருந்த தோனி பத்து போட்டிகளில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கிறார்.