For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி மீது போலீசார் வழக்குப் பதிவு.. சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கும் தல.. பீகாரில் நடந்தது என்ன?

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மீது பிஹாரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Recommended Video

Dhoni மீது Bihar Police வழக்கு பதிவு.. என்ன நடந்தது? #Cricket

2022ஆம் ஆண்டு தோனிக்கு சரிவையே தந்தள்ளது. முதல் சிஎஸ்கே அணி கேப்டன் பதவியிலிருந்து ராஜினாமா,

பிறகு ஜடேஜாவுடன் மோதல், சென்னை அணி புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் நிறைவு செய்தது என பல சிக்கல் எழுந்தது.

என்ன புகார்?

என்ன புகார்?

தற்போது தோனியின் தனிப்பட்ட வாழ்க்கையில் மேலும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. தோனி கிரிக்கெட்டை தவிர பல்வேறு விளம்பரங்கள், தொழில், விவசாயம் என பணத்தை ஈட்டி வருகிறார். இந்த நிலையில், New Global Produce India limited என்ற நிறுவனத்தை தோனி விளம்பர படுத்தியுள்ளார். இந்த நிலையில், SK எண்டர்பிரசைசிடம் 30 லட்சம் ருபாய்க்கு உரத்தை தோனி விளம்பரப்படுத்திய நிறுவனம் வாங்கியுள்ளது.

தோனி எப்படி சிக்கினார்

தோனி எப்படி சிக்கினார்

இதனையடுத்து அதற்காக காசொலை 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வங்கி கணக்கில் பணமில்லை என்று கூறி காசொலை திரும்பியுள்ளது. இது குறித்து கேட்டதற்க தோனி விளம்பரப்படுத்திய குளோபல் நிறுவனமும் பதில் சரிவர கூறாமல் இழுத்து அடித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த SK எண்டர்பிரசைஸ் குளோபல் நிறுவனம் மீது புகார் அளித்துள்ளனர்.

தோனி மீது வழக்குப் பதிவு

தோனி மீது வழக்குப் பதிவு

இதில், அந்த நிறுவனத்தை விளம்பர படுத்திய தோனி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தோனிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தோனி இதே போன்ற விவகாரத்தில் சிக்கி, அது இன்னும் முடியவில்லை. கடந்த 6,7 ஆண்டுகளுக்கு முன்பு அமராப்பள்ளி என்ற கட்டுமான நிறுவனத்தின் விளம்பர தூதராக தோனி செயல்பட்டார்.

அமராப்பள்ளி விவகாரம்

அமராப்பள்ளி விவகாரம்

இதனையடுத்து பலரும் வீடு கட்ட பணத்தை வழங்கியுள்ளனர். ஆனால் அந்த நிறுவனம் வீட்டை கட்டாமல் இழுத்து அடித்துள்ளது. இதனால் எழுந்த புகாரில் தோனி அந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக ராஜினாமா செய்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், தோனி மீது மற்றொரு மோசடி புகாரும் பதிவாகியுள்ளது.

Story first published: Thursday, June 2, 2022, 13:10 [IST]
Other articles published on Jun 2, 2022
English summary
Ms Dhoni caught in Legal trouble as Bihar police filed FIR on him. தோனி மீது மோசடி புகார்.. பீகார் போலீசார் வழக்குப் பதிவு.. அமராப்பள்ளி விவகாரம் போல் சர்ச்சை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+