Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MS Dhoni: தோனி-யின் 44வது பிறந்தநாள் விழா.. நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பற்ற கேப்டனாக விளங்கிய மகேந்திர சிங் தோனி தன்னுடைய 44வது பிறந்தநாளை கொண்டாடினார். 2007 டி20 உலக கோப்பை, 2011 50 ஓவர் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் கோப்பை, ஐபிஎல் கோப்பை, சாம்பியன்ஸ் லீக் கோப்பை, டெஸ்ட் போட்டியில் நம்பர் ஒன் இடம் என பல்வேறு சாதனைகளைப் படைத்த கேப்டனாக மகேந்திர சிங் தோனி விளங்கினார்.

இந்த நிலையில் தோனி தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். நடந்து முடிந்த சீசனில் சிஎஸ்கே அணி படுதோல்வியை தழுவி 10 ஆவது இடத்தை பிடித்தது.இந்த நிலையில் அடுத்த சீசன் டோனி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது.

MS Dhoni birthday

தோனிக்கு உடல் தகுதி பிரச்சனை அதிகமாக இருப்பதால் அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்து இன்னும் ஏழு மாதம் கழித்து தான் முடிவு எடுப்பேன் என்று தோனி விளக்கம் அளித்தார். இந்த சூழலில் ஜூலை 7ஆம் தேதி தோனி தன்னுடைய 44வது பிறந்த நாளை கொண்டாடினார்.

பழையதை மறக்காத தோனி ராஞ்சியில் தனது நண்பர்கள் கூட்டத்துடன் இணைந்து கேக் வெட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில் தோனி கேக்குகளை வெட்டி தனது நண்பர்களுக்கு கொடுக்கின்றார். இதில் பல நண்பர்களும் தோனியை வாழ்த்தி வருகின்றனர். இவ்வளவு பெரிய உச்சத்திற்கு சென்ற பிறகும் தோனி தன்னுடைய ஆரம்ப கால நண்பர்களை மறக்காமல் அவர்களுடன் பயணிக்கிறார் என்று ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

இந்த சூழலில் தற்போது தோனிக்கு 44 வயதாகிவிட்டது. அடுத்த ஐபிஎல் சீசன் தொடங்கும் போது தோனிக்கு கிட்டத்தட்ட 45 வயதை நெருங்கிவிடும். இந்த கட்டத்தில் தோனி ஐபி ம்எல் போட்டிகளில் விளையாடுவது என்பது அவர் உடல் நலத்திற்கும் சரியாக இருக்காது. இதனால் தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, July 7, 2025, 13:57 [IST]
Other articles published on Jul 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+