Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி ஒவ்வொரு வெற்றிக்கு பிறகும் ஸ்டம்பை எடுப்பது ஏன் தெரியுமா? தடைக்கு பிறகும் தலயின் வினோத கோரிக்கை

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பற்ற கேப்டனாக விளங்கிய மகேந்திர சிங் தோனி எப்போதும் ஒரு வழக்கத்தை வைத்திருப்பார். அதாவது தோனி கேப்டனாக பதவி ஏற்ற பிறகும் சரி அதற்கு முன்பும் சரி தாம் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தால் போட்டி முடிந்த பிறகு களத்தில் இருக்கும் ஸ்டம்பை உருவி எடுத்து வருவார்.

இந்த பழக்கத்தை தோனி பல ஆண்டுகளாக பின்பற்றி வந்தார். இதற்கு என்ன காரணம் என்பதை தோனியே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், வெற்றியின் ஒரு குறியீடாக ஸ்டெம்பை நான் எடுத்துச் செல்லும் பழக்கத்தை வைத்திருந்தேன்.

ipl 2025 ipl retention cricket ms dhoni CSK

இந்த போட்டிக்காக நாம் எப்படி தயாராகினோம். எப்படி போராடி வெற்றி பெற்றோம் என்பதை நினைவுபடுத்தும் விதமாக அமையும் ஒரு நினைவு பரிசாகவே இந்த ஸ்டெம்பை நான் வைத்திருக்கிறேன். நான் கிரிக்கெட் விளையாடிய காலத்திலிருந்து என் மனதுக்கு நிறைவான போட்டியில் இருக்கும் ஸ்டெம்பை நான் எடுத்து வந்திருக்கிறேன்.

என் வீட்டில் இதற்காகவே தனி ஒரு இடம் இருக்கிறது. நான் விளையாட வெற்றி பெற்ற ஆட்டங்களில் வீடியோவை பார்த்து நான் எடுத்து வந்த ஸ்டம்பையும் ஒப்பிட்டு இது எந்த போட்டிக்கான ஸ்டம்ப் என்பதை தனியாக பிரித்து வைத்து இருக்கின்றேன் என்று தோனி கூறி இருக்கிறார். ஆனால் 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு போட்டியில் பயன்படுத்தப்படும் ஸ்டெம்பை வீரர்கள் எடுத்துச் செல்ல ஐசிசி தடை விதித்தது.

இதற்கு காரணம் led ஆன ஸ்டம்ப் மாற்றப்பட்டதை எடுத்து ஒரு ஸ்டம்பின் விலை சுமார் 8 லட்சம் ரூபாய் வரை இருக்கிறது. இதனால் இதனை வீரர்கள் எடுத்துச் செல்ல நடுவர்கள் அனுமதி வழங்குவதில்லை இதை அடுத்து ஐசிசி இடம் தோனி ஒரு வினோத கோரிக்கையை வைத்திருந்தார்.

அதன்படி போட்டிக்கு எந்த ஸ்டெம்ப் பயன்படுத்தப்படுகிறதோ அதேபோல் மரத்தால் ஆன அதே நிறமுடைய ஸ்டெம்பை தயாரித்து அதனை வீரர்களுக்கு வழங்க வேண்டும் என தோனி கூறி இருந்தார்.எப்படி போரில் வீரர்கள் வெற்றி பெற்று தோல்வியுற்ற நாட்டில் இருந்து பரிசு பொருட்களை நினைவாக எடுத்து செல்வார்களோ அதை போல் தான் தோனிக்கு ஸ்டெம்புகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 22, 2024, 0:05 [IST]
Other articles published on Aug 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+