Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேக்ஸ்வெல்லுக்கு ஒரு சச்சின், ஒரு சேவாக் பார்சல்; சொல்வது அண்ணன் டோணி

கட்டாக்: சச்சின் டெண்டுல்கர், வீரேந்திரசேவாக்கின் திறமை மேக்ஸ்வெல்லுக்குள் உள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோணி தெரிவித்தார்.

ஐபிஎல் 7வது சீசனில் நேற்று சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல் 38 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார். இந்த அதிரடியால் அந்த அணி வெற்றி பெற்றது.

வீரேந்திரசேவாக் போல...

வீரேந்திரசேவாக் போல...

அவரது இந்த ஆட்டத்தை வாயார புகழ்ந்து டோணி கூறியுள்ளதாவது:

மேக்ஸ்வெல் மிகச்சிறப்பாக ஆடினார். அவருக்கு பிற பேட்ஸ்மேன்களும் உதவிகரமாக இருந்தனர். சிக்சருக்கு அடுத்தாற்போல அடுத்த சிக்சரை பறக்கவிடுவதற்கெல்லாம், தனிப்பட்ட திறமை தேவை. அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திரசேவாக் போல, மேக்ஸ்வெல்லும் பேட் செய்கிறார். அவரது சிறப்பான பேட்டிங் ஆட்டத்தை தற்போது வெளிக்காண்பித்து வருகிறார்.

ஆட்டத்தின் போக்கு மாறியது...

ஆட்டத்தின் போக்கு மாறியது...

பஞ்சாப்பின் இரண்டாவது பாதி பேட்டிங்கின்போது, சென்னை ஸ்பின்னர்கள் அதிக அளவு ரன்னை விட்டுக்கொடுத்துவிட்டனர். சுழற்பந்து வீச்சாளர்கள் ரன்களை அதிகமாக விட்டுக்கொடுத்ததால்தான் நாங்கள் தோல்வியடைய நேரிட்டது. முதலாவது பாதி ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெறும் 70 ரன்கள்தான் எடுத்திருந்தது. அதன்பிறகுதான் ஆட்டத்தின் போக்கு மாறியது.

ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தோம்...

ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தோம்...

ஓப்பனிங் சிறப்பாக இருந்திருந்தால் சென்னையும் இந்த ரன்னை துரத்தி பிடித்திருக்கும். ஆனால் அவ்வாறு சூழ்நிலை அமையவில்லை. டுவைன் ஸ்மித் மற்றும் ரவீந்திர ஜடேஜா விக்கெட்டுகள் வீழ்ந்தபோது இனிமேல் வெற்றிபெற முடியாது என்பது தெரிந்துவிட்டது. எனவே எங்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தோம். 230 ரன்னை அடிக்க ஆசைப்பட்டு 130 ரன்களில் வீழ்வதில் எனக்கு உடன்பாடில்லை. அவ்வாறு செய்தால் அடுத்த பந்தையத்தில் அது அணியின் மீது தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்றார்.

தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது...

தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது...

பஞ்சாப் அணி கேப்டன் ஜார்ஜ் பெய்லி கூறுகையில், சென்னை போன்ற அணியை இரு முறை வெற்றி கண்டது மகிழ்ச்சியளிக்கிறது. ஐபிஎல் பந்தையத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்தான் முதலாவது இடத்திலுள்ளது. அந்த அணியை இருமுறை வென்றது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது என்றார்.

Story first published: Thursday, May 8, 2014, 17:20 [IST]
Other articles published on May 8, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+