Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs RR - உன்ன நம்பி என் ரெக்கார்ட் போச்சு.. தோனி செய்த தவறு.. அதிர்ச்சி அடைந்த வர்ணனையாளர்கள்

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி என்றாலே, சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது தடுமாறி வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே ராயல்ஸ் அணியின் கை தான் ஓங்கி இருக்கிறது. நடப்பு தொடரில் கூட ராயல்ஸ் அணியிடம் தான் சிஎஸ்கே தோல்வியை தழுவியது.

இந்த நிலையில், இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது. இதில் , சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை எதிர்கொண்ட ஜெய்ஷ்வால் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார்.

MS Dhoni DRS vs RR went unsuccessful shocks csk fans

ஜாஸ் பட்லர் 21 பந்துகளில் 27 ரன்களில் வெளியேற, ஜெய்ஷ்வால் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், இவருடைய விக்கெட்டை கைப்பற்ற சிஎஸ்கே முயற்சி எடுத்தது. ஆட்டத்தின் 3.3வது ஓவரில் தீக்சனா வீசிய பந்தை ஜெய்ஷ்வால் ஸ்விப் செய்த போது , அது அவருடைய காலில் பட்டது.

இதற்கு தீக்சனா அவ்வளவு நம்பிக்கையாக அவுட் கேட்டார். இதற்கு கள நடுவர் அவுட் தரவில்லை. இதனால் தோனியும் தீக்சனாவை நம்பி, டிஆர்எஸ் கேட்டார். ஆனால், இடது கை பேட்ஸ்மேனுக்கு பந்துவீசும் போது, பந்து சரியாக ஸ்டம்ப் லைனில் பட்டால் மட்டுமே , அது ஸ்டம்பில் பட்டதா என்று பார்க்கப்படும்.

MS Dhoni DRS vs RR went unsuccessful shocks csk fans

ஆனால், தீக்சனாவின் பந்து ஸ்டம்ப் லைனில் படவில்லை. இதனால் தோனி எடுத்த டிஆர்எஸ் முடிவு பறிப்போனது. இதனை பார்த்த இயன் பிஷப்பும், கவாஸ்கரும் தோனி எபபோதும் டிஆர்எஸ் முடிவு கேட்டால், அவருக்கு சாதகமாக தான் வரும். ஆனால் தற்போது தோனியும் தவறு செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

Story first published: Thursday, April 27, 2023, 20:51 [IST]
Other articles published on Apr 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+