For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இளையராஜாவுடன் புதிய வாகனத்தில் உல்லாச பயணம்... தோனியின் புதிய பயணம்

சென்னை : முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி பைக் காதலராக உள்ளார். ராஞ்சியில் உள்ள இவரது பண்ணை வீட்டில் விதவிதமான பைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எப்போதும் பைக் ரைட் போவதில் தோனிக்கு இருக்கும் ஆர்வம் அலாதியானது. நேற்றுகூட தன்னுடைய மகள் ஜிவாவுடன் அவர் தன்னுடைய பண்ணை வீட்டில் இதமான வானிலைக்கு நடுவில் பைக் ரைடை மேற்கொண்டார்.

இந்நிலையில் தற்போது பைக்கில் இருந்து தோனியின் ஆர்வம் டிராக்டருக்கு மாறியுள்ளது. இளையராஜாவின் இசையுடன் அவரது டிராக்டர் பயணத்தை இணைத்து வீடியோ வெளியிட்டுள்ளது சிஎஸ்கே.

பைக் காதலர்

பைக் காதலர்

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, கிரிக்கெட்டில் மட்டும் திறமையானவர் இல்லை. மாறாக கால்பந்து உள்ளிட்ட போட்டிகளிலும், பைக் ஓட்டுவதிலும் இவர் சிறப்பானவர். இவருக்கு விதவிதமான பைக்குகளை ஓட்டுவதில் காதல் அதிகம். ராஞ்சியில் உள்ள இவரது பண்ணை வீட்டில் ஏராளமான விதவிதமான பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

டிராக்டர் ஓட்டிய தோனி

டிராக்டர் ஓட்டிய தோனி

இ,ந்நிலையில் தன்னுடைய பண்ணை வீட்டில் தன்னுடைய குடும்பத்தினருடன் உள்ள தோனி, தற்போது டிராக்டர் ஓட்டி பழகியுள்ளார். நீண்ட சாலை ஒன்றில் அவர் டிராக்டரை மிகவும் தேர்ந்த ஓட்டுநரை போல ஓட்டி வருகிறார். இந்த வீடியோவை சிஎஸ்கே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

சிஎஸ்கேவின் புதிய முயற்சி

சிஎஸ்கேவின் புதிய முயற்சி

தோனி டிராக்டர் ஓட்டும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிஎஸ்கே, இளையராஜாவின் இசையை இடையில் ஓடவிட்டுள்ளது. இதன்மூலம் அந்த டிராக்டர் பயணம் ரசிகர்களை குறிப்பாக தமிழக ரசிகர்களை மேலும் குஷியாக்கியுள்ளது. தன்னுடைய புதிய வாகனத்துடன் இளையராஜாவை தோனி சந்தித்துள்ளதாகவும் சிஎஸ்கே கேப்ஷன் வெளியிட்டுள்ளது.

ரசிகர்கள் காத்திருப்பு

ரசிகர்கள் காத்திருப்பு

கடந்த ஆண்டு உலக கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து விலகியுள்ள எம்எஸ் தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். ஐபிஎல்லில் அவரது அதிரடிகளை காண அவர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதங்களில் அது நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, June 3, 2020, 16:44 [IST]
Other articles published on Jun 3, 2020
English summary
CSK posted a video where Dhoni was seen driving a tractor
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+