Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெய்னாவுக்கு மாற்று வீரர் கிடைச்சாச்சு.. ஐபிஎல் ஏலத்தில் தோனி வைத்த கண்ணிவெடி.. இனி தப்பவே முடியாது!

கொச்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப இறுதியில் ஒரு வீரரை தேர்வு செய்திருக்கிறார் எம்.எஸ்.தோனி

2023ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொச்சியில் இந்த நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

10 அணிகளும் கடைசிக்கட்ட திட்டம் போட்டுக்கொண்டிருந்தாலும் சென்னை அணி என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களிடையே நிலவி வருகிறது. ஏனென்றால் அடுத்த சீசன் சிஎஸ்கேவுக்கு முக்கியமானதாகும்.

ஐபிஎல் மினி ஏலம்

ஐபிஎல் மினி ஏலம்

41 வயதாகும் எம்.எஸ்.தோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. சென்னை மண்ணில் விடைபெறுவேன் எனக்கூறியிருந்த அவர் கோப்பையுடன் விடைபெற வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கிறார். எனவே தனக்கு பிறகான சிஎஸ்கே அணியின் கட்டமைப்பை இப்போதே சரி செய்துக்கொடுத்துவிட்டு செல்ல முயன்று வருகிறார்.

பழமையான திட்டம்

பழமையான திட்டம்

அதன்படி பார்த்தால் சிஎஸ்கே அணியின் வெற்றிகளுக்கு காரணமாக இருந்தது ப்ளேயிங் 11 கட்டமைப்பு தான். பல வருடங்களுக்கு முன்பே நிறைய ஆல்ரவுண்டர்களை வைத்திருந்தது. எனவே அதே படையை மீண்டும் உருவாக்கிக்கொடுத்துவிட முடிவெடுத்துள்ளார். அதன்படி பிராவோவிற்கு சாம் கரண், கேப்டன்சிக்கு ருதுராஜ் கெயிக்வாட், ஓப்பனிங்கில் டொவோன் கான்வே, பவுலிங்கில் தீபக் சஹார், ஃபினிஷராக ஷிவம் தூபே பொருத்தப்பட்டுள்ளனர்.

ரெய்னாவுக்கு மாற்று

ரெய்னாவுக்கு மாற்று

ஆனால் நீண்ட நாட்களாக சுரேஷ் ரெய்னாவின் இடத்திற்கு மட்டும் மாற்று கிடைக்காமலேயே இருந்தது. மொயீன் அலியை பொருத்தி பார்த்தியும் பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் அதற்கு சரியான வீரர் கிடைத்துவிட்டார். அதுதான் தென்னாப்பிரிக்காவின் ரிலீ ரூசோ. டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்காக கலக்கி வரும் இவர் அப்படியே ரெய்னாவின் செயல்பாடுகளை கொண்டுள்ளார்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

ரெய்னா இடதுகையில் பேட்டிங்கிலும் வலதுகையில் ஆஃப் பிரேக் பவுலிங்கும் செய்வார். ரூசோவும் அதே போன்ற ஸ்டைல் தான். குறிப்பாக ரெய்னாவை போன்றே ஓப்பனிங், முதல் விக்கெட், மிடில் ஆர்டர் என அனைத்திலும் பொருந்தி விளையாடக்கூடிய வீரராக ரூசோவ் இருக்கிறார். அதே சமயம் ரெய்னாவை போன்றே அட்டகாச ஸ்ட்ரைக் ரேட் உள்ளது. ரூ.2 கோடி என்ற அடிப்படை தொகையுடன் ஏலத்திற்கு வரும் இவரை எப்படியாவது வாங்கிவிட தோனி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Story first published: Tuesday, December 20, 2022, 16:22 [IST]
Other articles published on Dec 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+