MS Dhoni: நீங்க பண்ணியது லெவல் 2 குற்றம்.. அதனால 50% பைன்..! ஐபிஎல் அறிவிப்பால் பொங்கிய ரசிகர்கள்
ஜெய்ப்பூர்: ஐபிஎல் விதிமுறைகளின்படி, சென்னை கேப்டன் தோனிக்கு குறைந்தபட்ச அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் உலகில் பரபரப்பான தொடர் என்ற பெயர் பெற்றது ஐபிஎல். எந்த சந்தர்ப்பத்திலும், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த தொடரில் உச்சகட்டமாக ராஜஸ்தான், சென்னை அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டி அமைந்துவிட்டது.
நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியும் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாத ஆட்டமாக இருந்தது. அந்த போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முதலில் 151 ரன்கள் எடுத்தது. 152 ரன்கள் என்பது சென்னைக்கு எட்டக்கூடிய எளிய இலக்கு தான் என்றாலும் இறுதிக்கட்ட ஓவர்களில் நடைபெற்ற சம்பவங்கள் யாரும் மறக்க முடியாத ஒன்று.

அந்த கடைசி ஓவர்
ஒரு கட்டத்தில் சென்னை அணியானது 4 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. எப்படியும் ஜெயிக்காது என்று தான் பெரும்பாலேனோரின் கருத்தாக இருந்தது. அதேபோல தான் ஆட்டத்தின் 20வது ஓவர் அமைந்திருந்தது.

முதல் பந்தில் சிக்சர்
அந்த கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவை 18 ரன்கள். முதல் பந்து சிக்சருக்கு பறந்தது. அடுத்த பந்தில் 1 ரன் வந்தது. அது நோ பாலாக அறிவிக்கப்பட ப்ரீ ஹிட்டில் தோனி இரண்டு ரன் எடுத்தார். ஆனால், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

நோபால் சர்ச்சை
பின்னர் வந்த சான்ட்னர், பந்தை புல் டாசாக வீச, அவர் 2 ரன்கள் எடுத்தார். அப்போது முதல் நடுவர் நோ பால் என்று அறிவிக்க, ஸ்கொயர் அம்பயரோ இல்லை என்று அறிவித்தார். ஆட்டத்தின் இந்த சம்பவம் தான் நேற்றைய கிரிக்கெட் உலகின் அது முக்கிய நிகழ்வாக மாறி போனது.

தோனியின் கோபமுகம்
மைதானத்தில் ஒரே குழப்பம்.... ரசிகர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. களத்துக்கு வெளியே இருந்த தோனி டென்ஷன் ஆனார். களத்துக்கு வந்தார்... நடுவர்களிடம் தமது கோப முகத்தை காட்டினார். பின்னர் கடைசிப் பந்தில் சிக்சர் அடிக்க ஐபிஎல் தொடரில் தோனிக்கு கேப்டனாக 100வது வெற்றி கிடைத்தது. ஆட்ட நாயகனாகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார்.

தோனிக்கு அபராதம்
இந் நிலையில், ஐபிஎல் விதிகளை மீறியதாக தோனிக்கு போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

லெவல் 2 குற்றம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் விதிமுறைகளை மீறியதால் போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்படுகிறது. தோனி ஐபிஎல் விதிமுறைகள் 2.20 வின்படி லெவல் 2 குற்றம் செய்தவராக அறியப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோனிக்கு தண்டனை
ஐபிஎல் விதிமுறைகளின்படி ஆர்ட்டிகிள் 2.20 என்பது, போட்டியின் ஸ்பிரிட்டுக்கு எதிராகச் செயல்படுவது குற்றம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கு குறைந்தபட்ச தண்டனையான ஊதியத்தில் 50% அபராதம் விதிக்கப்படும். அந்த தண்டனை தான் தோனிக்கு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால்... தோனியை இந்த தவறை முதல் முறையாக செய்ததால் அவருக்குக் குறைந்தபட்ச அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications