Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MS Dhoni: தோனிக்கு ரூ.1000 அபராதம்.. காரை வேகமாக ஓட்டியதால் போலீசார் நடவடிக்கை

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ராஞ்சியில் அதிவேகமாக காரில் சென்றதற்காக 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவரது வாகனம் வேக வரம்பை மீறியதை ராஞ்சி போக்குவரத்து போலீசார் கண்டறிந்ததைத் தொடர்ந்து, மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 183-ன் கீழ் இ-சலான் வழங்கப்பட்டது.

தோனி மீதான இந்த அபராதம், ரசிகர்கள் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தோனி போன்ற பொறுப்புள்ள நபர்களே இவ்வாறு செய்யலாமா? தோனியை பார்த்து, பலரும் இதை செய்ய மாட்டார்களா என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். இதே போன்று, சில நாட்களுக்கு முன்பு தோனிக்கு மற்றொரு சட்ட சிக்கல் ஏற்பட்டது.

ராஞ்சியில் உள்ள ஒரு குடியிருப்பு மனையை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதாக கூறி ஜார்க்கண்ட் மாநில வீட்டுவசதி வாரியம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.குடியிருப்பு பயன்பாட்டிற்கான அந்த இடம் வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராஞ்சியின் ஹார்மு சாலையில் அமைந்துள்ள இந்த மனையில், தோனி தனது தற்போதைய ரிங் ரோடு வீட்டிற்கு மாறுவதற்கு முன்பு வசித்து வந்தார். இதுவும் பிரச்சினையை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், ஐபிஎல் 2026 தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அணியின் சிறப்பு பயிற்சி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் பயிற்சி அமர்வில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சக வீரர்களுடன் தோனி இணைந்தார்.

பல இந்திய வீரர்கள் சிஎஸ்கே முகாமில் இணைந்துள்ளனர். வெளிநாட்டு வீரர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயிற்சி ஊழியர்கள் இன்னும் இணையவில்லை. தற்போது, உதவிப் பயிற்சியாளர்களான ஸ்ரீதரன் ஸ்ரீராம், ராஜீவ் குமார் மற்றும் உடல்திறன் பயிற்சியாளர் கிரெக் கிங் ஆகியோர் பயிற்சி முகாமை வழிநடத்தி வருகின்றனர்.

பயிற்சி அமர்வில் அனைவரின் கவனத்தையும் தோனி ஈர்த்தார். வலைப்பயிற்சியில் இடது கை சுழற்பந்து வீச்சாளரை எதிர்கொண்டபோது, வீசப்பட்ட ஒரு வைடு பந்துக்கு, அவர் திடீரென நின்று, வைடுக்கு சிக்னல் செய்வதுடன் குறும்புத்தனமான டான்ஸ் செய்து அனைவரையும் சிரிக்க வைத்தார். மார்ச் 28 அல்லது 29ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 3 வாரத்திற்கு முன்பே சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியை தொடங்கி விட்டனர்.

Story first published: Wednesday, March 4, 2026, 13:17 [IST]
Other articles published on Mar 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+