Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மரத்தடியில் மருத்துவரை பார்க்கும் தோனி.. சிகிச்சைக்கு வெறும் ரூ.40 மட்டுமே.. அப்படி என்ன ஸ்பெஷல்

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மரத்தடியில் மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுத்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரும் 7ஆம் தேதி வந்தால் தோனிக்கு வயது 41 ஆகி விடும். ஆனால் தோனி இன்னும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

ஐபிஎல் தொடரில், இளைஞர்களுக்கு ஈடு இணையாக அதிரடியாக ஆடும் தோனி, தற்போது வரை கூட மின்னல் வேகத்தில் ஓடுவார்.

ஆயுர்வேத மருத்துவம்

ஆயுர்வேத மருத்துவம்

தற்போது ஓய்வில் இருக்கும் தோனிக்கு, காலில் மூட்டு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவதிப்பட்டு வரும் தோனி, இதற்காக ஆங்கில மருத்துவரிடம் செல்லாமல், ஆயுர்வேத மருத்துவத்தை தேர்வு செய்துள்ளார். அதுவும் ஜார்க்கண்டில் காட்டுக்கு நடுவில் உள்ள ஒரு மருத்துவரிடம் தோனி சென்றுள்ளார். ராஞ்சியிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாபுங் என்ற இடத்தில் தான் அந்த மருத்துவர் வசிக்கிறார்.

மூட்டு வலிக்கு சிகிச்சை

மூட்டு வலிக்கு சிகிச்சை

தோனியின் பெற்றோர்களுக்கு வயது மூப்பால் ஏற்படும் கால், கை வலிகளுக்கு வண்டான் சிங் என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்று, அவர்களுக்கு வலியிலிருந்து நிவாரணம் கிடைத்துள்ளது. இதனை அறிந்த தோனி, தாமும், தனது மூட்டு வலிக்கு சிகிச்சை எடுக்க கடந்த ஒரு மாதமாக வண்டான் சிங்கை சென்று பார்க்கிறார்.

சிகிச்சை அளித்தேன்

சிகிச்சை அளித்தேன்

தோனிக்கு சிகிச்சை அளித்து அனுபவத்தை கூறும் வண்டான் சிங், முதலில் எனக்கு தோனியை அடையாளம் தெரியவில்லை. யாரோ வருகிறார்கள் என்று நினைத்தேன். தோனிக்கு கால்சியம் சத்து குறைப்பாடு காரணமாக தான் வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக மருந்துகளை அளித்துள்ளேன்.

வெறும் ரு.40 தான்

வெறும் ரு.40 தான்

சிகிச்சைக்கு 20 ரூபாய், மருந்துக்கு 20 ரூபாய் என மொத்தம் 40 ரூபாய் தான் அதற்கு ஃபிஸ்சாக வாங்கினேன். தோனியை பார்க்க தற்போது நிறைய பேர் கூடி விடுகிறார்கள். இதனால் அவரை காரிலேயே உட்கார வைத்து மருத்துவம் பார்த்து அனுப்பிவிடுகிறோம் என்று வண்டான் சிங் கூறியுள்ளார். தோனி மருத்துவம் பார்த்து சென்றதும், தற்போது அந்த மருத்துவர் தேசிய அளவில் பிரபலமாகிவிட்டார்.

Story first published: Saturday, July 2, 2022, 10:28 [IST]
Other articles published on Jul 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+