“அதை செய்யுங்க, எல்லாம் தானா வரும்” இந்திய வீரர்களுக்கு தோனி நச்சென்ற அட்வைஸ்.. ரசிகர்கள் புகழாரம்
மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக எம்.எஸ்.தோனி, தற்போதுள்ள இளம் வீரர்கள் முன்னேறுவதற்கான முக்கிய அறிவுரைகளை கூறியுள்ளார். அவரின் வார்த்தைகளை கேட்ட ரசிகர்கள், நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
2022ம் ஆண்டு இந்திய அணிக்கு மறக்க வேண்டிய ஆண்டாக இருந்துள்ளது. ஆசிய கோப்பை, டி20 உலகக்கோப்பை என அடுத்தடுத்து தோல்விகளை பெற்று திணறி வருகிறது.
இந்தாண்டில் மட்டும் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், பண்ட், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா, என அடுத்தடுத்து 7 கேப்டன்கள் இந்திய அணியை வழிநடத்தி வருகின்றனர்.

இந்திய அணி பிரச்சினை
இந்நிலையில் அணியில் இருக்கும் பல்வேறு வீரர்களும் தங்களது இடங்களை பறிகொடுத்து வருகின்றனர். ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஜடேஜா, பும்ரா, அஸ்வின், ஷமி என பல வீரர்களும் காயத்தினால் மாற்றப்பட்டு, நிலையான ஒரு படை இல்லாமல் பிசிசிஐ-ம் குழப்பத்தில் இருக்கிறது. இது தோல்விகளுக்கு வழி வகுக்கிறது. இந்நிலையில் இந்திய வீரர்களுக்கு தோனி அட்வைஸ் கூறியுள்ளார்.

தோனி அறிவுரை
பென்ஸ் காரின் புதிய மாடல் அறிமுக நிகழ்ச்சியில் தோனி பங்குபெற்றார். அதில் பேசிய அவர், நான் கிரிக்கெட் வீரர்களை பார்க்கும்போதெல்லாம் ஒன்றை மட்டுமே தொடர்ந்து கூறுவேன். நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று கிரிக்கெட் தான். அதை சரியான அக்கறையுடன் நாம் பார்த்துக்கொண்டால், நம்மை சுற்றி இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் தானாகவே சரியாகிவிடும். எனவே கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

சமூக வலைதளங்கள்
இன்று சமூக வலைதளங்கள் பெரிய பிரச்சினையாக உள்ளது. நான் இந்திய அணிக்காக அறிமுகமான 2004ம் ஆண்டில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் இல்லை. ஆனால் தற்போது பல வீரர்களும் லைக்ஸ் மற்றும் ஃபாலோவர்களுக்காக கவனம் செலுத்துகிறார்கள். எனவே அதனையெல்லாம் விட்டுவிட்டு தேசத்திற்காக வெற்றி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்க வேண்டும். அதனை நாம் பார்த்துக்கொண்டால், எல்லாமே தானாக தேடி வரும் என தோனி கூறியுள்ளார்.

கோச் அவதாரம்
2024ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான திட்டங்களில் தற்போது இருந்தே பிசிசிஐ களமிறங்கியுள்ளது. ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக்கியதுடன், ரோகித், கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்களை ஓரம்கட்டியுள்ளது. மேலும் இதில் தோனியை பயிற்சியாளராக நியமிக்க ஆலோசனைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications