Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீடியோ - பெரிய மனசுக்காரர் சார்.. இளம் கிரிக்கெட் வீரரை பைக்கில் தோனி அழைத்து சென்றதாக தகவல்

கொழும்பு : இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக கருதப்படுபவர் மகேந்திர சிங் தோனி. தோனி தான் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை என்றுமே மறந்ததில்லை.

ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியும் முடிந்த பிறகு பத்தாம் வகுப்புக்கு டியூஷன் செல்லும் மாணவர்கள் போல் தோனியிடம் இளம் கிரிக்கெட் வீரர்கள் பல அறிவுரைகளை கேட்க வரிசையில் நிற்பார்கள்.

MS Dhoni gives lift to young cricketers on his Yamaha bike claims viral video

தோனி அவர்கள் அனைவருக்கும் அவர்களின் சந்தேகங்களை தீர்த்து பல கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வார். மேலும் தோனிக்கு எப்போதுமே இளம் வீரர்கள் மீது தனி பிரியம் உண்டு. அவர் விளையாடும் காலத்தில் இருந்தே சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, விராட் கோலி ,ஜடேஜா ஹர்திக் பாண்டியா, ருதுராஜ் என பல வீரர்களை தங்களது சொந்த தம்பி போல் பார்த்துக் கொண்டு அவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக நிற்பார்.

இந்த நிலையில் பெயர் தெரியாத ஒரு கிரிக்கெட் வீரருடன் தோனி ஜார்க்கண்டில் பயிற்சி செய்திருக்கிறார். அப்போது பயிற்சி முடிந்த பிறகு தோனி அந்த இளம் வீரரை தனது பைக்கில் அழைத்து சென்றார் என அந்த வீரர் ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். தோனி தன்னுடைய யமஹா ஆர் டி 350 பைக் மாடலில் அந்த இளம் வீரரை அழைத்துக் கொண்டு வேகமாக செல்லும் காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

MS Dhoni gives lift to young cricketers on his Yamaha bike claims viral video

இந்த வீடியோவை பார்த்ததும் பலரும் நெகிழ்ச்சி அடைந்தாலும் அந்த இடத்தில் நாம் இருந்திருக்கக் கூடாதா என்று கலக்கத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் கிரிக்கெட் ஆங்கலிலும் ஒரு விஷயம் இதிலிருந்து தெரிகிறது. அடுத்த ஐபிஎல் சீசன் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில் அந்தத் தொடரில் தோனி விளையாடுவாரா மாட்டாரா என்பதை டிசம்பருக்குள் தாம் அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்.

ஏனெனில் டிசம்பர் மாதம் ஐபிஎல் மினி ஏலம் வருகிறது. இதனால் தோனி எவ்வாறு தனது உடல்நிலை இருக்கிறது என்பதை சோதித்து கொள்வதற்காக தான் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் என்று தெரிகிறது. அப்போதுதான் இந்த இளம் வீரரை தனது பைக்கில் தோனி அழைத்துச் சென்று டிராப் செய்து இருக்கிறார். இதனிடையே இந்த வீடியோவில் தோனி முதலில் தோன்றினாலும், பின்னர் பைக்கை ஓட்டி செல்வது தோனி தானா என்று பலரும் சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.

Story first published: Friday, September 15, 2023, 16:28 [IST]
Other articles published on Sep 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+