அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி நல்ல கிரிக்கெட் வீரர் ,நல்ல தலைவன் என்பதை தாண்டி நல்ல மனிதன் என்ற பெயரை வாங்கி இருக்கிறார்.வயதாக, வயதாக சில பொருட்களின் மதிப்பு கூடும் என்பார்கள்.
அப்படித்தான் தல தோனி வயதாக தன்னுடைய நற்குணங்களை உயர்த்தி கொண்டே வருகிறார். அகமதாபாத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி மே 28ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி அதிகாலை தான் நடந்து முடிந்தது.

இதனை பலரும் அகமதாபாத்தில் கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியே இரண்டு நாட்கள் தான் நடந்தது. ஆனால் ஐபிஎல் டி20 போட்டி மூன்று நாள் நடைபெற்றதாக ரசிகர்கள் கிண்டல் அடித்தனர். இந்த போட்டி நடைபெற வாய்ப்பு இல்லாத நிலையில் ஆடுகளப் பராமரிப்பாளரும் பணியாளர்களும் தான் போட்டியை நடத்த உறுதுணையாக இருந்தார்கள்.
ஆனால் போட்டி நடந்து முடிந்தவுடன் அந்த ஆடுகள பராமரிப்பாளர்களை யாருமே கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் ஆடுகள பராமரிப்பாளர்கள் தோனியை பார்த்து பேச வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாவலர்கள் தோனி அருகே வரவிடாதபடி தடுத்தனர். ஆனால் இதை கண்டித்த தோனி பாதுகாவலர்களை நகரும்படி கூறிவிட்டு ஆடுகளப் பராமரிப்பாளர்கள் அனைவரையும் அழைத்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்.
அப்போது தோனி அருகில் நிற்க வேண்டாம் என மீண்டும் பாதுகாவலர் அங்கிருந்து வந்து நகர்த்த, தோனி நீங்கள் கொஞ்சம் செல்லுங்கள். நான் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் என தாராள மனது காட்டினார். மேலும் ஆடுகளப் பராமரிப்பாளர்கள் பலரும் தோனியின் முதுகில் மேல் கை போட்டனர். ஒருவர் தோனியின் தோளிலே கை போட்டார்.
ஆனால் அதற்கு தோனி எதுவும் சொல்லாமல் அனைவருடன் மகிழ்ச்சியாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனை பார்த்த ரசிகர்கள் நெகழ்ச்சி அடைந்தனர். இந்தப் போட்டி நடக்க காரணமாக இருந்த மைதான பராமரிப்பாளர்களை அனைவரும் மறந்த நிலையில் தோனி மட்டும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு உரிய அங்கீகாரத்தை வழங்கி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.