Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயிற்சியின் போது வலியால் துடித்த தோனி.. "இதைப் பார்க்கவே நெஞ்சடைக்குது" என ரசிகர்கள் வேதனை

சென்னை: 2026 ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், 44 வயதான எம்.எஸ் தோனி பயிற்சியின் போது காலில் ஏற்பட்ட வலியால் மைதானத்தில் மிகவும் சிரமப்பட்டு நடக்கும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவரது இந்த நிலையைக் கண்ட சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஐபிஎல் தொடரின் தொடக்கம் முதலே விளையாடி வரும் தோனி, தற்போது தனது 19 ஆவது சீசனை எதிர்கொள்ள உள்ளார். ஐபிஎல் வரலாற்றின் மிக மூத்த மற்றும் வெற்றிகரமான வீரர்களில் ஒருவராகத் திகழும் அவர், தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கிரிக்கெட்டுக்காகவே அர்ப்பணித்தவர் ஆவார். மின்னல் வேக விக்கெட் கீப்பிங், கூர்மையான வியூகங்கள் மற்றும் விக்கெட்டுகளுக்கு இடையே சிறுத்தையைப் போல் ஓடி ரன் குவிக்கும் அபார உடல் தகுதி கொண்ட தோனி, தற்போது வலியால் அவதிப்பட்டு வருவது ரசிகர்களின் மனதை உலுக்கியுள்ளது.

MS Dhoni Injury Scare During IPL 2026 Practice at Chepauk Sparks Concern Among Fans

சமீப காலமாகவே கால் வலியால் அவதிப்பட்டு வரும் தோனி, வலைப்பயிற்சியை முடித்துவிட்டு பெவிலியன் திரும்பிய போது தனது வழக்கமான சுறுசுறுப்புடன் இல்லை. அவர் தனது 100 சதவீத உடல் தகுதியுடன் இல்லை என்பது அந்த வீடியோவில் அப்பட்டமாகத் தெரிந்தது. சமீபத்திய சீசன்களில் அவரது ஓய்வு குறித்த வதந்திகள் தொடர்ந்து விவாதப் பொருளாகி வரும் நிலையில், இந்த வீடியோ ரசிகர்களின் கவலையை மேலும் அதிகரித்துள்ளது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் இணையத்தில் தங்களது உணர்வுகளைத் வெளிப்படுத்தி வருகின்றனர். பல ரசிகர்கள், "உங்கள் உடல்நிலையை மீறி ஏன் இப்படிச் சிரமப்படுகிறீர்கள்? இதை எங்களால் பார்க்க முடியவில்லை. தயவுசெய்து ஓய்வெடுங்கள்" என அக்கறையுடன் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேசமயம், தனது உடல் வலியைப் பொருட்படுத்தாமல் சென்னை அணியின் மீதும் ரசிகர்கள் மீதும் அவர் வைத்துள்ள அளப்பரிய காதலால் தான் இன்றும் அவர் களத்தில் நிற்கிறார் எனப் பலரும் நெகிழ்ச்சியுடன் அவருக்குத் தங்களது நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.இந்த ஆண்டுடன் தோனி ஓய்வு பெறுவார் எனவும் சிஎஸ்கே வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Story first published: Friday, March 20, 2026, 19:11 [IST]
Other articles published on Mar 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+