Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே இருக்கும் நிலைமைக்கு 2 வாரம்-லாம் வெயிட் பண்ண முடியாது.. காயத்துடன் தோனி பயிற்சி

சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக முதல் 2 வாரங்கள் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்ட தோனி, தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வெளியாகி சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக தோனி ஓய்வில் இருப்பதாகவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டி உள்ளிட்ட ஆரம்பக்கட்ட போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி தோனி தனது கிரிக்கெட் உபகரணங்கள் அடங்கிய பையுடன் வலைப்பயிற்சிக்கு வரும் வீடியோவும், அங்கு அவர் பேட்டிங் செய்யும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் தோனி முழு வீச்சில் அதிரடியாக விளையாடாமல், பந்தின் வேகம் மற்றும் டைமிங்கை கணித்து லேசான முறையில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவது போல் தெரிகிறது.

MS Dhoni Injury Update IPL 2026 Video Sparks Comeback Rumors Among CSK Fans

சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்தது. இதை அடுத்து ஒரு மாத காலம் ஆட முடியாது என சொல்லப்பட்ட நிலையிலும் தோனி,பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி உள்ளது. எனவே, சிஎஸ்கே அணியை மீட்கவே தோனி விரைவில் போட்டிகளில் விளையாட தயாராகி வருகிறார் என சில ரசிகர்கள் கூறத் துவங்கி உள்ளனர்.

இந்த வீடியோ ஏப்ரல் 1ஆம் தேதி வெளியானதால், இது உண்மையிலேயே தோனியின் தற்போதைய நிலை தானா அல்லது முட்டாள்கள் தினத்திற்காக பகிரப்பட்ட பழைய வீடியோவா என்ற குழப்பமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முன்கூட்டியே காயம் குணமாகி தோனி அணிக்கு திரும்புவது குறித்து சிஎஸ்கே தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான தங்களது முதல் போட்டியில் சிஎஸ்கே அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. மழை காரணமாக மைதானம் மூடப்பட்டிருந்த நிலையில், டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி வெறும் 127 ரன்களுக்கு சுருண்டது.

சென்னை அணியில் அதிகபட்சமாக ஜேமி ஓவர்டன் மட்டுமே 43 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் சென்னை பேட்ஸ்மேன்கள் திணறினர். நெருக்கடியான நேரத்தில் களத்தில் நின்று அணியை வழிநடத்தும் அனுபவ வீரரான தோனியின் இல்லாமை முதல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, April 2, 2026, 9:34 [IST]
Other articles published on Apr 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+