For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை பேட்டி எடுத்த தோனி... வெளியான கலக்கல் வீடியோ... பார்க்க தயாரா?

மும்பை : உலக கோப்பை 2011 வெற்றியின் 10வது ஆண்டு கொண்டாட்டத்தை இந்திய கிரிக்கெட் உலகம் கொண்டாடி வருகிறது.

இதையொட்டி முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்களை தங்களது ட்விட்டர் பக்கங்களில் தெரிவித்து வருகினற்னர்.

இந்நிலையில் அந்த போட்டியின் நாயகன் எம்எஸ் தோனி, அந்த நினைவுகளை கொண்டாடும்வகையில் தன்னை தானே பேட்டி எடுத்துக் கொண்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

வெற்றி கொண்ட இந்திய அணி

வெற்றி கொண்ட இந்திய அணி

2011 இந்திய கிரிக்கெட்டின் மறக்க முடியாத ஆண்டு. இந்திய அணி வரலாறு படைத்த ஆண்டு. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணி உலக கோப்பை தொடரில் பங்கேற்று 28 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி வாகை சூடிய ஆண்டு. இநநிலையில் தற்போது அந்த வெற்றியின் 10வது ஆண்டு கொண்டாட்டத்தில் நாம் உள்ளோம்.

கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்

கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்

இதையடுத்து தற்போது இந்திய கிரிக்கெட் உலகம் மட்டுமின்றி உலகளவில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். மேலும் முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் இந்த தினத்தையொட்டி தங்களது மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்களை தொடர்ந்து ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தன்னை தானே பேட்டி

தன்னை தானே பேட்டி

இந்நிலையில் அந்த தொடரில் அவுட்டாகாமல் 91 ரன்களை அடித்து ஆட்ட நாயகன் விருதையும் தட்டி சென்ற எம்எஸ் தோனி, இந்த இனிய நாளில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். அவரை அவரே பேட்டி எடுக்கும்படியான வீடியோவை கல்ஃப் ஆயில் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

வித்தியாசமான தோனிகள்

இதில் இரண்டு விதமான தோனியை பார்க்க முடிகிறது. 2005ல் தோனியின் வடிவத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒரு தோனி காணப்படுகிறார். அவரது பேச்சில் பதற்றம் உள்ளிட்டவற்றை காணமுடிகிறது. அதேபோல எதிரில் உள்ள தோனி மிகவும் நிதானமான தற்போதைய தோனியை பிரதிபலிக்கிறார். இருவரும் ஒருவரையொருவர் பேட்டி எடுக்கின்றனர்.

தோனி நினைவலைகள்

தோனி நினைவலைகள்

இந்நிலையில் 2011 உலக கோப்பை குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்ட தோனி, தான் இதுவரை விளையாடிய இன்னிங்ஸ்களில் உலக கோப்பை 2011 இறுதிப்போட்டி தான் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று அவர் கூறியுள்ளார். மேலும் அந்த போட்டியை தான் முடித்து வைத்தது வேற லெவலாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, April 2, 2021, 21:34 [IST]
Other articles published on Apr 2, 2021
English summary
My favourite innings was in 2011 World Cup final -MS Dhoni
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+