
பல்வேறு விமர்சனங்கள்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. இதையடுத்து தொடர்ந்து 3 போட்டிகள் தொடர் தோல்வியே அந்த அணிக்கு கிடைத்தது. இந்நிலையில் வாட்சன் உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளித்துவிட்டு பௌலர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

மூத்த வீரர்கள் அபாரம்
ஆயினும் அணியில் முக்கிய மாற்றங்கள் எதையும் செய்யாமலேயே தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் அணி பங்கேற்றது. இந்நிலையில் கடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக வாட்சன் மற்றும் டூ பிளசிஸ் இருந்தனர்.

பிரெட் லீ புகழ்ச்சி
விமர்சித்தவர்களின் வாயை அடைத்தனர் மூத்த வீரர்கள். இந்நிலையில் சிஎஸ்கே கேப்டன் தோனி சிங்கம் போன்றவர் என்றும் தற்போதைய சூழலில் அவரை தடுத்து நிறுத்த முடியாது என்றும் முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ புகழ்ந்துள்ளார்.

ரன்களை குவித்த வாட்சன்
தன்னுடைய அணி வீரர்கள் மீது முழுமையான நம்பிக்கை வைத்து தோனி செயல்படுவார் என்றும் லீ குறிப்பிட்டுள்ளார். சிஎஸ்கேவின் முதல் நான்கு போட்டிகளில் மொத்தமே 52 ரன்களை மட்டுமே வாட்சன் அடித்திருந்தார். இதன் சராசரி 13 ரன்கள் மட்டுமே. ஆயினும் அவர்மீது தோனி வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப கடந்த போட்டியில் அவர் 53 பந்துகளில் 83 ரன்களை குவித்தார்.


Click it and Unblock the Notifications











