Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி தான் எங்களுக்கு கடவுள்.. எங்களுக்கு அவ்வளவு உதவி செய்தாரு..சமீபத்தில் ஓய்வு பெற்ற வீரர் கருத்து

MS Dhoni : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி திறமையும் உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. நாம் எங்கு பிறந்தோம் எங்கு வளர்ந்தோம் என்பதில் பிரச்சனையே இல்லை.

நம்மால் நாம் பிறந்த இடம் பெருமை சேர வேண்டும் என்பதற்கு தோனியின் வாழ்க்கை மிகவும் எடுத்துக்காட்டு. நாட்டின் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதியான ஜார்க்கண்ட்டில் இருந்து வந்த தோனி, பிற்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.

MS Dhoni is god of the jharkand cricket says saurabh tiwary

மேலும் தங்கள் பகுதி இளம் வீரர்களுக்கு பல உதவிகளை தோனி செய்து இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சௌரப் திவாரி தோனியை ஜார்க்கண்ட் கிரிக்கெட்டின் கடவுள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். தோனியை போல் அவரும் ஜார்கண்டில் தான் வந்திருந்தார்.

இது குறித்து பேசிய அவர் இந்தியாவுக்காக எப்போது தோனி கிரிக்கெட் ஆட தொடங்கினாரோ, அதிலிருந்து எங்களுக்கெல்லாம் ஒரு கடவுளாக தான் தோனி இருந்தார். தோனி மூலம் தான் ஜார்க்கண்ட் என்று ஒரு இடம் இருக்கிறது என்று பலருக்குத் தெரியும். இதேபோல் ஜார்கண்ட் அணி குறித்து அனைவரும் கவனிக்க தொடங்கினர்.

தோனி எப்போதெல்லாம் ராஞ்சியில் இருக்கிறாரோ அப்போதெல்லாம் எனக்கு நம்பிக்கை அளிப்பார். நான் பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது அவரும் வந்து பயிற்சி செய்வார். பேட்டிங்கில் என்ன செய்ய வேண்டும்? கிரிக்கெட் எப்படி விளையாட தயாராக வேண்டும் என்பது குறித்து எல்லாம் எங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்.
மேலும் பல விஷயங்களுக்கு எங்களுக்கு அவர் ஆதரவாக இருந்தார்.

தோனி அணியை வழிநடத்தும் போது எங்களுக்கு பல சுதந்திரம் கொடுத்திருந்தார். நாங்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும் எங்களுக்கு துணையாக அவர் எப்போதும் நிற்பார். தோனி கேப்டனாக இருப்பது மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பராக ஸ்டெம்ப் பின் நின்று கொண்டு பவுலர்களுக்கு துணையாக இருப்பார். ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது?எப்படி பந்து வீச வேண்டும்? பில்டிங்கை எங்கு நிறுத்த வைக்க வேண்டும்? என்பதெல்லாம் தோனிக்கு நன்றாக தெரியும் என்று சௌரப் திவாரி பாராட்டியுள்ளார்.

Story first published: Friday, March 1, 2024, 13:06 [IST]
Other articles published on Mar 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+