For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனிக்கே ஸ்டம்பிங்கா!! ரப்பர் மாதிரி காலை இழுத்து கிரீஸில் வைத்த தோனி!

மும்பை : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தாலும் சில நேர்மறையான விஷயங்களும் இந்த போட்டியில் நடந்தது.

தோனி முதல் போட்டியில் நிதான ஆட்டம் ஆடியதால் மீண்டும் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். ஆனால், இரண்டாம் போட்டியில் அதிரடி காட்டி அசத்தினார்.

அதிரடி தோனி

அதிரடி தோனி

இந்த போட்டியில் 23 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார் தோனி. இந்த ஆட்டத்தில் மூன்று ஃபோர், மூன்று சிக்ஸ் அடித்தார் தோனி. மேலும், இந்த போட்டியில் பேட்டிங்கின் போது, ஸ்டம்பிங் முயற்சியில் இருந்து தோனி தப்பித்தார்.

ஸ்டம்பிங்கில் கில்லி

ஸ்டம்பிங்கில் கில்லி

தோனி ஸ்டம்பிங்கில் கில்லி என்பது உலகுக்கே தெரியும். அரை நொடி கிடைத்தாலும், தோனி பேட்ஸ்மேனை ஸ்டம்பிங் செய்து விடுவார். ஆனால், அவரை ஸ்டம்பிங் செய்ய முடியுமா? அது மிகவும் கடினம். இதை பல முறை நிரூபித்துள்ளார் தோனி.

அகலமாக வீசிய சாம்பா

அகலமாக வீசிய சாம்பா

இரண்டாவது டி20யில் தோனி பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது ஆடம் சாம்பா பந்து வீசினார். தோனி முன்னேறி வருவதை உணர்ந்து பந்தை அகலமாக வீசினார். விக்கெட் கீப்பர் பந்தை பிடித்து பெயில்சை தட்டி அவுட் கேட்டார்.

தோனி ஆச்சரியம்

ஆனால், தோனி அதற்குள் கிரீசுக்குள் காலை வைத்துவிட்டார். இந்த முயற்சியில் தோனி சுமார் 2.14 மீட்டர் தூரத்திற்கு தன் காலை அகட்டி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இது குறித்த புகைப்படத்தை பிசிசிஐ தன் ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது.

ரசிகர்கள் வரவேற்பு

ரசிகர்கள் இதை பெருமளவில் வரவேற்று உள்ளனர். எலாஸ்டிக் பொருட்களுக்கு சிறந்த உதாரணம் - ரப்பர், தோனி என ரசிகர் ஒருவர் வேடிக்கையாக கூறி உள்ளார்.

Story first published: Thursday, February 28, 2019, 17:12 [IST]
Other articles published on Feb 28, 2019
English summary
MS Dhoni is super flexible while saving himself from a stumping attempt
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X