Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகிலேயே சிறந்த கிரிக்கெட் கேப்டன் டோணி.. இப்படி சொல்ல இதுதான் காரணம்

மும்பை: இந்தியாவின் சிறந்த கேப்டன் டோணிதான் என்று சும்மா சொல்லவில்லை விமர்சகர்களும், ரசிகர்களும். உலகின் தலை சிறந்த கேப்டனாக விளங்கியவர் டோணிதான் என்று சொன்னால்கூட, ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் ரசிகர்களும் கோபித்துக் கொள்ள முடியாத அளவுக்கு டோணியின் கேப்டன் திறமையை பறைசாற்ற கைமேல் புள்ளி விவரம் உள்ளது.

ஜார்கண்டை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டோணி, 2007ல் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி, டோணி தலையில் 'கட்டப்படுகிறது'. அந்த ஆண்டு உலக கோப்பையில் இந்தியா பரிதாபமாக தோற்று வெளியேறியது இதற்கு காரணம்.

ஆனால் அதே ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை தொடரை தனது தலைமையில் வெற்றிபெறச் செய்து கேப்டனாக தன்னை நியமித்ததற்கு நியாயம் கற்பித்தார் டோணி.

கடைசி ஓவர் த்ரில்லர்

கடைசி ஓவர் த்ரில்லர்

அதுவும் பாகிஸ்தானுக்கு எதிரான அந்த பைனலின் கடைசி ஓவரில் டோணி எடுத்த முடிவு இதுவரை சிறந்த கேப்டன்ஷிப் முடிவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அறிமுகமில்லாத பவுலரை வைத்து அசத்தல் வெற்றி பெற்றார் டோணி.

ஆஸி.யிலும் வெற்றி

ஆஸி.யிலும் வெற்றி

50 ஓவர் உலக கோப்பை தொடரில் அடைந்த அவமானத்திற்கு மருந்திட்டு தேற்றி உற்சாகமூட்டியது டி20 வெற்றி. இதன்பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சி.பி. சீரிஸ் தொடரின் முதல் இரு பைனலிலும் இந்தியாவை வெற்றிபெறச் செய்து உலக கிரிக்கெட் அணிகளை உன்னிப்பாக கவனிக்க வைத்தார் டோணி.

உலக கோப்பை

உலக கோப்பை

1983ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா உலக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்த நிலையில், 2011ல் வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த பைனலில் சச்சின், கோஹ்லி நடையை கட்டிய நிலையில் கடைசி வரை நிலைத்து நின்று சிக்சரோடு வெற்றிக் கனியை பறித்துக் கொடுத்தார் டோணி. பரபரப்பான அந்த பைனல் போட்டியில் டோணி வெற்றிக்கான சிக்சர் விளாசியபோது, மொத்த இந்தியாவும், "டோணி... டோணி.." என்று கத்திய கோஷம் சந்திரமண்டலம் வரை எதிரொலித்திருக்கலாம்.

எந்த கேப்டனுக்கும் தகுதியில்லை

எந்த கேப்டனுக்கும் தகுதியில்லை

இது மட்டுமல்ல, 2013ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவை வெற்றிபெறச் செய்து அந்த கோப்பையிலும் முத்தமிட்டார் டோணி. உலகின் எந்த கேப்டனும் இந்த மூவகை கோப்பையையும் அணிக்காக பெற்றுக் கொடுத்தது கிடையாது. டோணி தலைமையில் வெளிநாடுகளில் பல போட்டிகளில் இந்தியா தோற்றிருக்கலாம். ஏன், இந்தியாவிலேயே கூட இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்திருந்தது. ஆனால் உலக கோப்பை என்று வந்துவிட்டால் டோணி உக்கிரமாக மாறிவிடுவார் என்பதற்கு அம்மூன்று கோப்பைகளும் வரலாற்று சான்றுகளாகும்.

Story first published: Thursday, January 18, 2018, 14:26 [IST]
Other articles published on Jan 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+