Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் படிச்ச ஸ்கூல்ல டோணி ஹெட்மாஸ்டர்.. போக்கிரி விஜய் பாணியில் பேசிய தினேஷ் கார்த்திக்

Recommended Video

தோனி தான் எனக்கு குரு - தினேஷ் கார்த்திக்- வீடியோ

சென்னை: டோணி எப்போதும் என்னைவிட சிறந்தவர், அவர் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்து இருக்கிறார் என்று தினேஷ் கார்த்திக் பேட்டி அளித்துள்ளார்.

முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்று நிதாஸ் கோப்பையை வென்றுள்ளது. இதன் கடைசி இரண்டு ஓவரில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மிகவும் அதிரடியாக ஆடினார்.

கடைசி இரண்டு ஓவரில் மொத்தம் தினேஷ் கார்த்திக் 8 பந்துகள் பிடித்தார். இதில் 3 சிக்ஸ் இரண்டு பவுண்டரி அடித்தார், மொத்தம் 29 ரன்கள் எடுத்தார். ஒரே போட்டியின் மூலம் இவர் கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் ஆகியுள்ளார்.

ஒரே சமயத்தில்

ஒரே சமயத்தில்

இந்திய அணியில் டோணி, தினேஷ் கார்த்திக் இரண்டு பேரும் ஒன்றாகவே சேர்ந்தார்கள். 2004 செப்டம்பர் மாதம் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்ந்தார். டிசம்பர் மாதம் டோணி அணியில் சேர்ந்தார். ஆனால் டோணிக்கு கிடைத்த பல வாய்ப்புகள் தினேஷுக்கு கிடைக்கவில்லை.

கேப்டன் வாய்ப்பு

கேப்டன் வாய்ப்பு

டோணிக்கு முன்பு தினேஷ் கார்த்திக்குக்கு கேப்டன் வாய்ப்பு இருந்தது. இந்திய அணி கங்குலி, டிராவிட் இல்லாமல் கஷ்டப்பட்ட போது தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக நியமிக்கலாம் என்று கிரேக் சாப்பல் கூறியிருந்தார். ஆனால் கடைசியில் கேப்டன் வாய்ப்பு டோணிக்கு கிடைத்தது.

யார் பெரியவர்

யார் பெரியவர்

இந்த நிலையில் முத்தரப்பு தொடரின் இறுதி போட்டிக்கு பின் டோணி பெரியவரா, தினேஷ் கார்த்திக் பெரியவரா என்ற விவாதம் எழுந்தது. அதற்கு தினேஷ் கார்த்திக் ''எப்போதும் டோணிதான் பெரியவர். என்னை அவருடன் ஒப்பிட்டு பார்க்கவே முடியாது'' என்றுள்ளார்.

ஹெட்மாஸ்டர்

ஹெட்மாஸ்டர்

மேலும் ''நான் படித்த பள்ளியில் அவர்தான் டாப்பர், அவர்தான் ஹெட் மாஸ்டர் என்று கூட சொல்லலாம். அவருக்கு என்னைவிட நிறைய அனுபவம் இருக்கிறது. கடைசி நேரத்தில் எப்படி ஆட வேண்டும் என்று அவரை பார்த்துதான் கற்றுக்கொண்டேன்'' என்றுள்ளார்.

Story first published: Wednesday, March 21, 2018, 11:03 [IST]
Other articles published on Mar 21, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+