Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி அவருக்கு பிடித்த வீரரை மட்டுமே அணியில் வைத்திருப்பார்.. மனோஜ் திவாரி பரபரப்பு புகார்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீர தோனி, தமக்கு பிடித்த வீரர்களை மட்டுமே அணியில் வைத்திருப்பார் என முன்னாள் கிரிக்கெட் மனோஜ் திவாரி பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். மனோஜ் திவாரி, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தோனியின் தலைமையில் கீழ் இந்தியா அணியில் அறிமுகமானார்.

இதுவரை 12 சர்வதேச ஒரு நாள் மற்றும் 3 சர்வதேச டி20 போட்டிகளில் மனோஜ் திவாரி விளையாட இருக்கிறார். திவாரி கடைசியாக ஜிம்பாப்வே தொடரில் 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருந்தார். திறமையான வீரராக மனோஜ் திவாரி அறியப்பட்டாலும், அவருக்கு இந்திய அணியில் பெரும் அளவு வாய்ப்பு கிடைத்தது இல்லை. .

MS Dhoni Manoj Tiwary Cricket news

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்திய அணியில் ஏன் நான் அதிகப் போட்டிகளில் விளையாடவில்லை என்று கேட்கிறீர்கள். அதற்கு நான் பதில் சொல்ல தேவையில்லை என்று நினைக்கின்றேன். இதற்கு தோனி,டங்கன் பிளாட்சர் மற்றும் தேர்வு குழுவினர்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஆனால் இதுவரை எனக்கு அதற்கான விடை கிடைக்கவில்லை. நான் எப்போதுமே பயிற்சியாளர் அல்லது தேர்வு குழுவினர் இல்லை. கேப்டனை சந்தித்து எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றெல்லாம் பேசியது கிடையாது. ஆனால் நான் முன்பு சொன்னது போல் தோனியை சந்திக்கும் போது நிச்சயம் நான் அவரிடம் கேட்பேன். சதம் அடித்த பிறகு என்னை ஏன் அடுத்த போட்டியில் இருந்து நீக்கினீர்கள் என்று நிச்சயம் கேட்பேன்.

இதுவரை நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியாது. இல்லை அவர்கள் என்ன முடிவு எடுத்தார்கள்? எதைப் பற்றி பேசினார்கள் என்றும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கான விடையை தோனி தான் சொல்ல வேண்டும்.ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் வேறுபடும் சிலர். தோனி வீரர்களுக்கு ஆதரவாக நிற்பார் என்று கூறி வருகின்றனர்.

ஆனால் என்னுடைய அனுபவம் வேறு மாதிரி தான் இருந்திருக்கின்றது. உண்மையிலே அவர் வீரர்களுக்கு ஆதரவாக நின்று இருந்தால் நிச்சயம் அவர் எனக்கும் ஆதரவளித்திருக்க வேண்டும். ஆனால் அது அப்படி நினைக்கவில்லை. நான் இலங்கைத் தொடருக்கு மீண்டும் பிளேயிங் லெவனுக்கு வந்தேன். ஒரு போட்டியில் 21 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினேன்.

இதைப் போன்று ஒரு அரை சதமும் அடித்து இருந்தேன் .ஆனால் அதன்பிறகு மீண்டும் நான் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டு எனக்கு யாரும் ஆதரவாக நிற்கவில்லை. இதனால் என்ன நடந்தது ஏன் நீக்கப்பட்டேன் என்று காரணம் இன்றும் எனக்கு புரியவில்லை. நன்றாக செயல்பட்டால் தான் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய விஷயத்தில் அப்படி கிடையாது.

ஆனால் மற்றவர்கள் குறித்து என்னால் பேச முடியாது. தோனியை அனைவருக்குமே பிடிக்கும். அவர் கேப்டனாக பல ஆண்டுகள் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கின்றார். அவருடைய தலைமை குணம் எப்போதுமே நன்றாகத்தான் இருந்தது. ஆனால் என்னுடைய விஷயத்தில் என்ன ஆச்சு என்று தெரியவில்லை.
ஆனால் இரண்டு வீரர்கள் தொடர்ந்து தோனி வாய்ப்பு வழங்கி வந்தார். அந்த இரண்டு வீரர்களையும் தோனிக்கு மிகவும் பிடிக்கும். இதனால் முழு ஆதரவையும் ஆதரவு வழங்கி இருந்தார். அதை பற்றி பலரும் பேசி இருக்கிறார்கள். ஒருவேளை என்னை பிடிக்காமல் போயிருக்கலாம். அதை வேண்டுமானால் நான் பதிலாக சொல்கிறேன் என்று மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

Story first published: Tuesday, August 26, 2025, 16:16 [IST]
Other articles published on Aug 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+