Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாங்க திரும்பி வந்துட்டோம்னு சொல்லு... கெத்து காட்ட தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ்

துபாய் : ஐபிஎல் பட்டியலில் இறுதி இரண்டு இடங்களில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் ஐபிஎல்லின் 14வது போட்டியில் மோதவுள்ளன.

இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிய கட்டாயம் அந்த அணிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த போட்டியில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தால் மட்டுமே ஐபிஎல் பட்டியலில் இறுதியில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னை நிரூபிக்க முடியும்.

இறுதியில் சிஎஸ்கே

இறுதியில் சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்லின் மிகவும் பலமான அணியாக கடந்த சீசன்களில் இருந்து வந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் எப்போதுமே சிறப்பான அணிகளாக இருந்த நிலையில், தற்போது சிஎஸ்கே, 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று ஐபிஎல் பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது.

இறுதியில் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ்

இறுதியில் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ்

தான் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மட்டுமே தன்னுடைய பலத்தை நிரூபித்தது சிஎஸ்கே. சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையிலும் புள்ளிகள் அடிப்படையில் சிஎஸ்கே பட்டியலில் இறுதியில் உள்ளது.

பரபரப்பான போட்டி

பரபரப்பான போட்டி

முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி, அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சிஎஸ்கேவின் அம்பத்தி ராயுடு காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், இன்றைய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனாலும் இன்றைய போட்டி மிகுந்த பரபரப்புடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டாக சொதப்பும் சிஎஸ்கே

கூட்டாக சொதப்பும் சிஎஸ்கே

ஒருவார கால இடைவெளிக்கு பிறகு சிஎஸ்கே இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இதனால் அந்த அணி வீரர்கள் உற்சாகத்துடன் இன்றைய போட்டியை எதிர்கொள்ள தயாராகியுள்ளனர். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அணியின் வீரர்கள் தனிப்பட்ட முறையில் சிறப்பாக செயல்பட்டாலும், கூட்டு முயற்சியில் சொதப்பி வருகின்றனர்.

குர்ரான் சிறப்பு

குர்ரான் சிறப்பு

இந்த சீசனில் சிஎஸ்கேவின் பௌலிங் அட்டாக் சிறப்பாக அமையவில்லை என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. சாம் குர்ரான் மட்டுமே நிலையாக பௌலிங் செய்து வருகிறார். இந்நிலையில் பௌலிங்கிலும் அணியின் கேப்டன் தோனி சில மாற்றங்களை புகுத்தி உள்ளதாக கூறப்படும் நிலையில், இன்றைய போட்டி மிகவும் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

சிறப்பான பந்துவீச்சு

சிறப்பான பந்துவீச்சு

இதேபோல சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிலும் கேப்டன் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் இணையவுள்ளது அணியின் மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது. மேலும் பௌலர்கள் ரஷீத் கான், புவனேஸ்வர் குமார் ஆகியோரும் சிறப்பான பந்துவீச்சை இன்றும் வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இன்றைய போட்டியில் இரு அணிகளும் வாழ்வா சாவா போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Friday, October 2, 2020, 10:05 [IST]
Other articles published on Oct 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+