For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜிம்பாப்வே தொடர்: டோணி தலைமையில் 16 பேர் கொண்ட 'யூத்' அணி அறிவிப்பு- பெருசுகளுக்கு ஓய்வு!!

By Mathi

மும்பை: ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் டோணி தலைமையிலான 16 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கோஹ்லி, ரோஹித் சர்மா, ஷிகார் தவான், அஸ்வின் உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளைஞர்களைக் கொண்ட அணியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஜூன் 11-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இந்த பயணத்தின் போது ஜூன் 11,13 மற்றும் ஜூன் 15 ஆகிய நாட்களில் ஒருநாள் போட்டிகளும் ஜூன் 18,20,22 ஆகிய நாட்களில் 20 ஓவர் போட்டிகளும் நடைபெற உள்ளன. அனைத்துப் போட்டிகளும் ஹராரேவில் நடைபெறும்.

MS Dhoni to lead India in Zimbabwe

இந்த ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. டோணி தலைமையிலான இந்திய அணி வீரர்கள்: லோகேஷ் ராகுல், ஃபசல், மணீஷ் பாண்டே, கருண் நாயர், அம்பத்தி ராயுடு, ரிஷி தவான், அக்ஸர் படேல், ஜயந்த் யாதவ், தவால் குல்கர்னி, ஜஸ்பிரீத் பும்ரா, பரிந்தர் சரன், மன்தீப் சிங், கேதார் ஜாதவ், ஜெயதேவ் உனாகட், யுவேந்திர சஹால்.

ஜிம்பாப்வே போட்டிக்கான அணியில் விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, ஷிகார் தவான், சுரேஷ் ரெய்னா, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, May 23, 2016, 16:16 [IST]
Other articles published on May 23, 2016
English summary
Mahendra Singh Dhoni will lead a 16-member squad for India's short limited-overs tour of Zimbabwe from June 11-22.Virat Kohli, Rohit Sharma, Shikhar Dhawan, Suresh Raina, R Ashwin and Ravindra Jadeja have been rested.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+