ஜிம்பாப்வேக்கு வந்து சேர்ந்தாச்சு.. இனி சூதானமாக விளையாடி ஜெயிக்கப் பார்க்கனும்!
ஹராரே: டோணி தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வே வந்து சேர்ந்துள்ளது. 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளன.
11ம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. ஹராரேவில் முதல் போட்டி நடைபெறும்.
முன்னதாக மும்பையிலிருந்து கிளம்பி இந்திய அணி நீண்ட விமான பயணத்திற்குப் பின்னர் ஹராரே வந்து சேர்ந்தது.

ஜூன் 11 முதல்
ஜூன் 11ம் தேதி முதல் 22ம் தேதி இரு நாட்டு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.

எல்லாமே ஹராரே
அனைத்துப் போட்டிகளும் தலைநகர் ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில்தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த போட்டிகள்
ஜூன் 11, 13, 15 ஆகிய தேதிகளில் ஒரு நாள் போட்டிகள் நடைபெறும். அதேபோல ஜூன் 18, 20, 22 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இவர்கள் இடம் பெறவில்லை
இந்த அணியில் பெரிய அளவில் சீனியர்கள் இல்லை. நிறையப் புதுமுகங்களே உள்ளன. விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், அஸ்வின் ஆகியோர் இடம் பெறவில்லை.


Click it and Unblock the Notifications