Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

100 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்ககூடியவர் தோனி.. எங்க 3 பேரையும் அவர் தான் உருவாக்கினார்- ரெய்னா

மும்பை: நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்க கூடிய வீரர் தான் தோனி என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2026 தொடரில் தோனியின் பங்கு குறித்து சுரேஷ் ரெய்னாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர்,"ஹெலிகாப்டர் ஏற்கெனவே அங்குத் தரையிறங்கிவிட்டது. கடந்த ஆண்டு அவர் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்.

அங்குள்ள இளைஞர்களுக்கு இப்போது வழிகாட்டுதல் தேவை. இந்த அணி ஏன் இவ்வளவு வெற்றிகரமானது என்பதை தோனி சொல்வார். அவர் அங்கு இருக்க வேண்டும்," என்று பதிலளித்தார். ருதுராஜ் கெய்க்வாட் அணியை முன்னின்று வழிநடத்தாலும், "அனைத்து இளைஞர்களும் கற்றுக்கொள்ள விரும்புவது சிறந்தவர்களிடமிருந்து தான்" என்பதே அவர்களின் கருத்தாக இருக்கும் என ரெய்னா கூறினார்.

கீப்பிங் மற்றும் பேட்டிங் தவிர, தோனி ஐபிஎல் 2026 இல் இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார். "தோனி போன்ற ஒரு வீரர் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பிறக்கிறார்கள் என மக்கள் நினைக்கிறார்கள். தோனி கேப்டனாக இருக்கும் போது தான் விராட் கோலியை உருவாக்கினார். ரோகித் சர்மாவை உருவாக்கினார். என்னையும் அவர் தான் உருவாக்கினார்."

"சிஎஸ்கே அணியில் தோனி பாயின் பங்கு ஒரு கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் அதற்கு மேலாக, சர்பஞ்ச்(தலைவர்) , தோனி பாய், அங்கு அமர்ந்திருப்பார். அவர் எல்லா போட்டிகளிலும் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன். அது அவரது உடல் தகுதியைப் பொறுத்தது."

'"இந்த ஆண்டு கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளை விட முக்கியமானது. அவர் ஒவ்வொரு வீரரின் பங்களிப்பையும் வரையறுப்பார். தோனி என்ற தனிப்பட்ட வீரரை விட, இளைஞர்களுக்கு எம்.எஸ். தோனி இன்னும் அதிகமாகத் தேவை," என்று ரெய்னா தெரிவித்தார்.

ஐபிஎல் 2025 இல் தோனி சிஎஸ்கேவுக்காக அனைத்து 14 போட்டிகளிலும் விளையாடி, 13 இன்னிங்ஸ்களில் 135.17 ஸ்ட்ரைக் ரேட்டில் 196 ரன்கள் எடுத்தார். 44 வயதான அவர் இந்த சீசனில் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா, அவ்வாறு விளையாடினால் விக்கெட் கீப்பிங்கும் செய்வாரா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Story first published: Thursday, March 19, 2026, 7:15 [IST]
Other articles published on Mar 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+