For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2024 ஐபிஎல் தொடரில் ரசிகர்களை அதிகம் மகிழ்வித்த வீரர்.. 42 வயதில் 220 ஸ்ட்ரைக் ரேட் உடன் ஆடிய தோனி

சென்னை: 2024 ஆம் ஆண்டின் சிறந்த ஐபிஎல் வீரர்களை பட்டியலிட்டால் அதில் நிச்சயம் தோனியின் பெயர் இருக்கும். 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிகச்சில போட்டிகளில் மட்டுமே ஆடி இருந்தாலும் ரசிகர்களை மகிழ்வித்ததில் தோனி தான் நம்பர் ஒன் ஆகவும் இருக்கிறார்.

2024 ஐபிஎல் தொடரில் தோனி 11 இன்னிங்ஸ்களில் மட்டுமே பேட்டிங் செய்தார். அதில் 161 ரன்கள் மட்டுமே எடுத்தார். எட்டு முறை நாட் அவுட் ஆக இருந்தார். அவர் மொத்தம் 14 ஃபோர் மற்றும் 13 சிக்ஸ் அடித்து இருந்தார். சில போட்டிகளில் அவரது அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

year ender 2024 csk

42 வயது ஆகும் வீரர் ஒருவர் ஃபினிஷர் ஆக கடைசி ஒன்று அல்லது இரண்டு ஓவர்களில் பேட்டிங் இறங்கி சிக்ஸர்களாக அடித்து தள்ளுவது என்பதை யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அப்படி ஒரு சம்பவத்தை செய்தார் தோனி.

2024 ஐபிஎல் தொடரில் ரசிகர்களை அதிக அளவில் மகிழ்வித்தது தோனி தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவர் அடித்த சிக்ஸர்களை பார்ப்பதற்காக, தோனி களமிறங்குவாரா? என ஆவலுடன் இருந்தனர் ரசிகர்கள்.

தோனியின் பேட்டிங்கை பார்ப்பதற்காகவே இந்தியா முழுவதிலும் சிஎஸ்கே அணி ஆடிய அனைத்து மைதானங்களிலும் ரசிகர்கள் பெரும் அளவில் கூடி இருந்தனர். அவர் 161 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தாலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 220.54 என்பதாக இருந்தது.

இப்படி ஒரு ஸ்ட்ரைக் ரைட்டில் தோனி எந்த ஒரு ஐபிஎல் தொடரிலும் விளையாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2022 வரை சராசரியாக 110 முதல் 130 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் தான் தோனி ஆடி வந்தார். ஆனால், 2023 ஐபிஎல் தொடரில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 182 ஆக இருந்தது. அது 2024 ஐபிஎல் தொடரில் 220.54 ஆக உயர்ந்து உள்ளது.

Story first published: Monday, December 16, 2024, 23:18 [IST]
Other articles published on Dec 16, 2024
English summary
MS Dhoni might give a cameo like IPL 2024 in next year edition
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+