“விஸ்டன்” அறிவித்த இந்தியாவின் சிறந்த டி20 அணி.. கேப்டன் தோனிக்கே இடமில்லை.. ரசிகர்கள் குமுறல்
மும்பை: பாரம்பரிய கிரிக்கெட் நாளிதழான விஸ்டன், இந்தியாவின் ஆல் டைம் சிறந்த டி20 அணியை அறிவித்துள்ளது.
டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்களை கொண்ட ஒரு அணியாக விஸ்டன் அறிவித்துள்ளது.
இதில் இந்தியாவுக்கு டி20 கோப்பை, 4 ஐபிஎல் கோப்பையை வாங்கி தந்த தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள வீரர்களை பற்றி தற்போது காணலாம்.

முன்வரிசை வீரர்கள்
தொடக்க வீரர்களாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்துள்ள முதல் 2 வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். மூன்றாவது வீரராக தற்போது தான் அணிக்குள் வந்த சூர்யகுமார் யாதவ் இடம்பிடித்துள்ளார். நடுவரிசையில் 4வது வீரராக அதிரடி மன்னன யுவராஜ் சிங் இடம் பிடித்துள்ளார்.

நடுவரிசை
5வது வீரராக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை விஸ்டன் தேர்வு செய்துள்ளது. 6வது வீரராக நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா இடம்பிடித்துள்ளார். 7வது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்துள்ளார். 8வது வீரராக சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தேர்வாகியுள்ளார்.

வேகப்பந்துவீச்சாளர்
9வது வீரராக வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாரும், 10வது வீரராக பும்ராவும். 11வது வீரராக வேகப்பந்துவீச்சாளர் நெஹ்ரா இடம்பிடித்துள்ளார். 12வது வீரராக அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் இந்தியாவுக்காக டி20 உலககோப்பை வென்று தந்த தோனியின் பெயர் இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தோனிக்கு இடமில்லை
இந்தியாவுக்காக 98 டி20 போட்டியில் விளையாடி 1617 ரன்களை தோனி அடித்துள்ளார். இதில் சராசரி 37. ஸ்ட்ரைக் ரேட் 126 ஆகும். இப்படி இருக்க தோனியை சேர்க்காதது ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. இதே போன்று ஜடேஜா, கம்பீர் போன்ற வீரர்களும் ஏன் இடம்பெறவில்லை என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications