சென்னை:ஐபிஎல் போட்டிக்கு தயாராகும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, சென்னைக்குப் புறப்பட்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.அதை அவரது ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 12வது சீசன் வரும் 23ம் தேதி தொடங்க உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்கப் போட்டியில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

ஐபிஎல் போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த சென்னை அணி விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (முதல் தொடங்க உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் முடிந்ததை அடுத்து, எஞ்சியுள்ள சென்னை அணியின் வீரர்கள் சொந்த ஊர் திரும்பினர். இதனிடையே, ஐபிஎல் போட்டிக்கு தயாராகும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, சென்னைக்குப் புறப்பட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, கேதர் ஜாதவ் மற்றும் தாகூர் ஆகியோர் சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டனர். சென்னை வரும் எஞ்சியுள்ள வீரர்கள் சி.எஸ்.கே அணியின் வலைப்பயிற்சியில் இணை உள்ளனர்.
அவர்கள் விமானத்தில் இருக்கும் புகைப்படத்தை சிஎஸ்கே அணி தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், மூன்று சிங்கங்கள்... சென்னைக்கு புறப்பட்டுள்ளன... நம்ம தல-க்கு வணக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை தோனி ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.