Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி அணிந்திருந்த பியானோ சட்டை.. விலை எவ்வளவு தெரியுமா? அப்படி என்ன ஸ்பெஷல்

ராஞ்சி: இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த கேப்டனாக விளங்கிய தோனி, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை வழிநடத்தி ஐந்து முறை கோப்பையை வென்று தந்திருக்கிறார். கிரிக்கெட்டுக்கு வருவதற்கு முன்பு சாதாரண குடும்பத்தை சேர்ந்த தோனி அதன்பின் படிப்படியாக உயர்ந்து தற்போது ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்தை சேர்த்து உள்ளார்.

தோனிக்கு பைக்குகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று நாம் அனைவருக்குமே தெரியும். பல வகைகளான பைக்குகளை தனது வீட்டில் தோனி வைத்திருக்கிறார். இந்த நிலையில் தோனி ஃபேஷனிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

MS Dhoni Shirt Price

தோனியின் ஹேர் ஸ்டைல் ஒரு காலத்தில் கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. அந்த வகையில் தோனி விதவிதமான டீசர்ட்களையும் ஆடைகளையும் அணிந்து வலம் வருவது என்பது புதிது கிடையாது. இந்த சூழலில் தோனி அண்மையில் அணிந்திருந்த ஒரு சட்டை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அதாவது தோனி அணிந்திருந்த சட்டையில் பியானோ கீ போர்டு டிசைன் இடம் பெற்றிருந்தது. மேலும் தோனியின் ஆடை முழுவதும் மியூசிக்கல் நோட்ஸ் இடம் பெற்றிருந்தது. இந்த ஆடை ரசிகர்களில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. இந்த நிலையில் தோனியின் இந்த ஒரு சட்டையின் விலை எவ்வளவு தெரியுமா?

நாமெல்லாம் மிஞ்சி மிஞ்சி போனால் அதிகமாக ஆயிரம் ரூபாய்க்கு எடுப்போம். ஆனால் தோனியின் இந்த சட்டையின் விலை கிட்டத்தட்ட 72 ஆயிரம் ரூபாய் ஆகும். சாதாரண சட்டை போல் இருக்கும். இதில் அப்படி என்ன விஷயம் இருக்கிறது என்று கேட்டால் இந்த சட்டை பட்டு துணியால் ஆனது என்பது தான் சிறப்பு அம்சம்.

இந்த சட்டையின் பிராண்ட் அமீரி என்று நிறுவனத்தை சேர்ந்தது. அந்த சட்டையின் பிராண்ட் பியானோ கீஸ் இடம்பெற்று இருக்கும். தற்போது தோனி இந்த சட்டையை அணிந்து இருப்பதன் மூலம் இது சமூக வலைத்தளத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் 72 ஆயிரம் ரூபாய் கொடுத்து இந்த ஆடையை வாங்க முடியாது. ஆனால் சில போலியான நிறுவனங்கள் தோனியின் இந்த சட்டை ஸ்டைலை மிகக் குறைந்த விலையில் விற்று விடுவார்கள் என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Story first published: Friday, July 18, 2025, 18:24 [IST]
Other articles published on Jul 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+