Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MS Dhoni birthday - தோனியின் சொத்து மதிப்பு எவ்வளவு? கார் வகைகள் என்ன? வீட்டில் இவ்வளவு வசதிகளா?

ராஞ்சி : இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பற்ற கேப்டனாக விளங்கிய மகேந்திர சிங் தோனி இன்று தன்னுடைய 43வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை எப்படி தொடங்கினார் என்று நம் அனைவருக்கும் தெரியும்.சாதாரண ஹவுசிங் போர்ட் வீட்டில் பிறந்த தோனிக்கு தற்போது ஏழு ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு இருக்கின்றது.

இது தோனியின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. தோனியின் இந்த பிறந்த நாளில் அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு? அவர் தங்கி இருக்கும் ராஞ்சி வீட்டின் பெயர் என்ன? அதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது? தோனியிடம் என்ன கார் இருக்கிறது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

MS Dhoni ms dhoni birthday

சொந்த ஊரான ராஞ்சியில் 7 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடை கட்டியிருக்கிறார். அந்த வீட்டிற்கு கைலாஷ்பதி என்ற பெயரையும் வைத்திருக்கிறார். தோனி போன்ற ஜாம்பவான்கள் வெளியே சென்றாலே கூட்டம் கூடிவிடும். இதனால் தன் வீட்டுக்குள்ளேயே ஒரு உலகத்தை தோனி உருவாக்கி இருக்கிறார்.

அதிநவீன சொகுசு உடற்பயிற்சி கூடம், பெரிய அளவிலான நீச்சல் குளம், கிரிக்கெட் போட்டிக்கு தயாராக வலை பயிற்சி, அதை போல் வீட்டில் உள்ளே வலை பயிற்சி செய்வதற்காக உள் விளையாட்டு அரங்கம்,பெரிய அளவிலான புல்வெளி என 5 ஸ்டார் ஹோட்டலில் இருக்கும் வசதியே தோற்கும் அளவுக்கு தோனி தன்னுடைய வீட்டை கட்டமைத்திருக்கிறார். தோனியின் இந்த வீட்டின் மதிப்பு சுமார் 6 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த வீட்டை தோனியை வடிவமைத்தாராம். தோனிக்கு இது மட்டுமல்லாமல் டெஹ்ராடூன் நகரில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வீடும் இருக்கின்றது. தோனி கார் மற்றும் பைக் பிரியர் என்று நம் அனைவருக்குமே தெரியும். தோனி தன்னுடைய வீட்டின் உள்ளேயே பல கார் மற்றும் பைக்குகளை வைத்திருக்கிறார்.

தோனி தற்போது வைத்திருக்கும் கார்களின் வகையில் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹம்மர் ஹெச் 2, 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடி q7, மிட்சுபிஷி பஜிரோ எஃப் எக்ஸ், 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரோவர் ஃப்ரீ லேண்ட்,மகேந்திரா ஸ்கார்பியோ, மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ளான ஃபெராரி எப் 99 gto, 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஜீப் கிராண்ட், பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான நிசான் ஜோங்கா, 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான gmc சியிரா, மெர்சிடெஸ் பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ என பல்வேறு கார் வகைகளை வைத்திருக்கிறார்.

இதேபோன்று தோனியிடம் சுமார் 70 வகைகளான பைக்குகள் இருக்கின்றது. 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹார்லி டேவிட்சன் பைக், 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான கான்பிடேரட் ஹெலிகெட், 35 லட்சம் மதிப்புள்ளான டுகாட்டி 1098, 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான கவாஸ்கி நிஞ்சா ஹச் டு போன்ற பைக்குகள் இருக்கின்றது.பல்வேறு தொழில் நிறுவனங்களையும் தோனி வைத்திருக்கின்றார்.

நாடு முழுவதும் sports fit world என்ற நிறுவனம் மூலம் 200 ஜிம்கள் நடத்தி வருகிறார். பல நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் தோனி இருக்கிறார். இப்படி அவருடைய சொத்து மதிப்பு மட்டும் 1040 கோடி ரூபாய் இருக்கிறது. ஆண்டுதோறும் சம்பளமாகவே தோனிக்கு 50 கோடி ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் விளையாட்டு உலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் என்ற பெருமையும் தோனிக்கு இருக்கிறது. இது தவிர ஐபிஎல் மூலம் ஆண்டுதோறும் 12 கோடி ரூபாய் சம்பளம் வருகின்றது.

Story first published: Sunday, July 7, 2024, 6:15 [IST]
Other articles published on Jul 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+