For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“சாரே.. கொல மாஸ்”.. டென்னிஸ் தொடரில் களமிறங்கிய எம்.எஸ்.தோனி.. இனி ரூட்டே வேற.. எங்கு? எப்போது?

ஜார்க்கண்ட்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி டென்னிஸ் தொடரில் களமிறங்கியுள்ள வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும், தோனி மீது இருந்த அதே காதல் மற்றும் ஈர்ப்பும் இன்னும் ரசிகர்களிடம் இருந்து குறையவே இல்லை.

தோனி என்ன செய்துக்கொண்டிருக்கிறார், ஐபிஎல் தொடருக்காக எதாவது செய்து வருகிறாரா, அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர்.

தோனி செயல்பாடுகள்

தோனி செயல்பாடுகள்

இதற்கேற்றார் போலவே தோனியும் அவ்வப்போது, பொது நிகழ்ச்சிகளுக்கு செல்கையில் இந்திய அணி குறித்து பேசுவது, சிஎஸ்கே தொடர்பான அப்டேட்களை கொடுப்பது போன்றவைகளை செய்து இன்னும் அதே ஃபார்மில் இருக்கிறார். சமீபத்தில் கூட புதிதாக வந்துள்ள கியா மின்சார காரை வாங்கி ரஞ்சியில் வலம் வந்த வீடியோக்கள் இணையத்தை கலக்கியது.

டென்னிஸ் போட்டி

டென்னிஸ் போட்டி

இந்நிலையில் டென்னிஸ் தொடரில் தடம் பதித்துள்ளார். ஜார்காண்ட் மாநிலத்தின் கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆடவர் டென்னிஸ் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் எம்.எஸ்.தோனி, உள்ளூர் டென்னிஸ் வீரர் சுமீத் என்பவருடன் ஜோடி சேர்ந்து இரட்டையர் பிரிவில் கலந்துக்கொண்டு கலக்கியுள்ளார்.

ஃபிட்னஸ்

ஃபிட்னஸ்

Tank - டி சர்ட்டை அணிந்துக்கொண்டு எம்.எஸ்.தோனி அங்கும் இங்கும் துள்ளி குதித்துக்கொண்டு டென்னிஸ் ஆடிய புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்துள்ளது. இதுமட்டுமல்லாமல், 41 வயதிலும் ஃபிட்னஸில் குறையே வைக்காத தோனியின் பைசஃப்ஸ், உடற்கட்டுகளை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஓய்வு அறிவிப்பு

ஓய்வு அறிவிப்பு

அடுத்தாண்டு ஐபிஎல் தொடருடன் தோனி அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என தெரிகிறது. இம்முறை ஹோம் மைதானத்திலும் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னையிலேயே ஓய்வு பெறலாம். இதன்பின்னர் இந்திய டி20 அணியின் இயக்குநராக பதவியேற்கவுள்ளார் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, November 24, 2022, 11:38 [IST]
Other articles published on Nov 24, 2022
English summary
CSK Skipper MS Dhoni Participated in Tennis tournament of Jharkhand , pictures hits the Internet
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+