Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெளிநாட்டு மண்ணில் தோனி சதம் அடிக்கவில்லையா? யார் சொன்னா? இந்த ரெக்கார்டுகளை கொஞ்சம் பாருங்க

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 3 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார். பேட்டிங் வரிசையில் நம்பர் ஆறு அல்லது ஏழாவது வீரராக இறங்கும் தோனி அணியின் வெற்றிக்கு பல போட்டிகளில் உதவி இருக்கிறார்.

தனி ஆளாக நின்று ஆட்டத்தின் போக்கையே தோனி பலமுறை மாற்றியிருக்கிறார். இந்த நிலையில் தோனியை பிடிக்காத சிலர் வெளிநாட்டு மண்ணில் தோனி ஒரு சதம் கூட அடித்ததில்லை என்று கூறி வருகின்றனர்.

MS Dhoni Performance in overseas odi matches and centuries list

தோனிக்கு எதிராக அவர் வெளிநாட்டு மண்ணில் சதம் அடிக்கவில்லையே. அவரை எப்படி நீங்கள் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று கூறுகிறீர்கள் என பலரும் டிரெண்ட் செய்து வந்தனர். வெளிநாட்டு மண்ணில் தோனி சதம் அடிக்கவில்லையா என்பதை தற்போது பார்க்கலாம். வெளிநாட்டு மண் என்பது சொந்த மண் தவிர மற்ற அனைத்து நாடுகளிலும் நடைபெறும் போட்டியாகும். அதன்படி இந்தியாவுக்கு வெளியே என்றால் அது வங்கதேசத்தையும் பாகிஸ்தானையும் இலங்கையும் சேர்த்துதான் குறிக்கும்.

அப்படி இருக்க தோனி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச மண்ணில் ஒரு சதம் அடித்திருக்கிறார். இதேபோன்று சவாலான பாகிஸ்தான் மண்ணில் ஒரு சதம் அடித்திருக்கிறார். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக ஒன்பது சதம் அடித்திருக்கிறார். நாங்கள் பாகிஸ்தான் வங்கதேசத்தை எல்லாம் வெளிநாடு என்று ஒப்புக்கொள்ள மாட்டோம். இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தோனி அடித்த ஸ்கோரை சொல்லுங்கள் என்று நீங்கள் கேட்கிறீர்களா?

அதற்கும் பதில் இருக்கிறது. தோனி வெளிநாட்டு மண்ணில் தனி ஆளாக நின்று பல போட்டிகளில் வென்று கொடுத்திருக்கிறார். குறிப்பாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க தோனி ஒரு போர் வீரன் போல் நின்று செயல்பட்டிருக்கிறார். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் தோனி அதிகபட்சமாக 95 ரன்கள், இங்கிலாந்து மண்ணில் 89 ரன்களும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 88 ரன்களும் தென்னாப்பிரிக்காவில் டர்பன் நகரில் 90 ரன்களும், இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் 92 ரன்களும், இங்கிலாந்தின் நாட்டின் நாட்டிங்காம் மைதானத்தில் 82 ரன்களும், இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் 82 ரன்களும் தோனி அடித்து இருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் தோனியின் சராசரி 50 என்ற அளவில் இருக்கிறது. இந்திய வீரர்களில் வெளிநாட்டு மண்ணில் அதிக சராசரி வைத்திருக்கும் நபர் என்றால் அது தோனி தான். சரி உங்களை யார் நடுவரிசையில் இறங்க சொல்வது பேட்டிங் முன் வரிசையில் இறங்கி ரன் அடிக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம்.

அதையும் தோனி செய்து இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்றாவது வீரராக 16 இன்னிங்ஸில் விளையாடி உள்ள தோனி 993 ரன்கள் அடித்திருக்கிறார். இது சராசரி 82 என்ற அளவில் இருக்கிறது. இதில் இரண்டு சதங்களும் ஆறு அரை சதமும் அடங்கும். தோனி மட்டும் தான் சிறந்த வீரர் என்று சொல்லவில்லை தோனியும் சிறந்த வீரர்களில் ஒருவர்தான் என்பதை மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

Story first published: Friday, June 30, 2023, 20:09 [IST]
Other articles published on Jun 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+