கிரிக்கெட்னா விக்கெட் கீப்பர்.... ஃபுட்பால்னா கோல் கீப்பர்.... அசத்தும் தோனி!
Recommended Video

மும்பை:தற்போது ஓய்வில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான மகேந்திர சிங் தோனி, கால்பந்து மைதானத்தில் புகுந்து கலக்கிய புதிய வீடியோ மற்றும் படங்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி, தற்போது ஓய்வில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால், ஒருதினப் போட்டித் தொடர் முடிந்த உடன், இங்கிலாந்தில் இருந்து திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், மும்பையில் உள்ள கால்பந்து மைதானத்தில் அவர் நடிகர் இஷான் கட்டருடன் கால்பந்து விளையாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் வெளியான தடக் ஹிந்தி படத்தில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருடன் நடித்துள்ளார் இஷான் கட்டர். தோனியும் கட்டரும் கால்பந்து விளையாடும் படங்கள், இன்ஸ்டாகிராமில் வெளியாகி, வைரலாகி உள்ளது.
கிரிக்கெட் வீரராவதற்கு முன், தோனிக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கால்பந்து. தனது சிறு வயதில் கோல் கீப்பராக அவர் பல கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியின்போதும், கால்பந்து விளையாடுவதை தோனி வழக்கமாக கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications