Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடவுள் கையில் செருப்பா? டோணிக்கு வந்த சிக்கல்

சென்னை: விஷ்ணு பகவானைப் போல டோணியை சித்தரித்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் செருப்பு இடம் பெற்றிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் பிரபலங்கள் நடிப்பதால் பின்விளைவுகள் அதிகம் ஏற்படுகின்றன என்று இது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களை கடவுளாக சித்தரித்து போஸ்டர் ஒட்டுவது இந்தியாவில் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இப்போது டோணியை விஷ்ணுவாக சித்தரித்து ஒட்டிய போஸ்டர்தான் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பர வருமானம்

விளம்பர வருமானம்

சத்துபானம் முதல் காலில் போடும் ஷூ வரை டோணி இடம்பெறாத விளம்பரமே இல்லை. டோணிக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் அவரை பிராண்ட் அம்பாசிடராக வைத்து விளம்பரப்படுத்த பல நிறுவனங்கள் போட்டிபோடுகின்றன. டோணிக்கு ஆண்டுக்கு 27 கோடி ரூபாய் விளம்பரம் மூலம் மட்டுமே வருவாயாக கொட்டுகிறது.

டோணியும் விளம்பரங்களும்

டோணியும் விளம்பரங்களும்

டோணி அதிக அளவில் விளம்பரங்களில் தோன்றுவதை சித்தரிக்கும் வகையில் வகையில், பிஸினஸ் இந்தியா இதழ் ஒன்று டோணியை 'விஷ்ணு' போல சித்தரித்து, அட்டைப்படம் வெளியிட்டது. அதில் அவரது கையில் ஷூவும் இருந்தது.

நீதிமன்றத்தில் வழக்கு

நீதிமன்றத்தில் வழக்கு

டோணியின் இந்த புகைப்படம் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமூக சேவகர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நேற்று நீதிபதி வேணுகோபால் கவுடா முன்பு விசாரணைக்கு வந்தது.

நீதிபதி கண்டனம்

நீதிபதி கண்டனம்

வழக்கை விசாரித்த நீதிபதி, '' டோணி போன்ற பிரபலங்களுக்கு மக்களின் மத உணர்வுகள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் தெரிந்திருக்க வேண்டும். பிரபலங்கள் பணத்துக்காக பின்விளைவுகள் பற்றி யோசிக்காமல் விளம்பர ஒப்பந்தங்களில் ஈடுபடுகின்றனர். என்றும் வேதனை தெரிவித்தார்.

பணம் வாங்கி நடிக்கவில்லை

பணம் வாங்கி நடிக்கவில்லை

டோணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணம் வாங்கிக் கொண்டு டோணி இப்படி நடிக்கவில்லை என்று பதிலளித்தார். வழக்கு விசாரணை, வரும் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Story first published: Tuesday, August 11, 2015, 13:48 [IST]
Other articles published on Aug 11, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+