Dhoni: அவரு மட்டும் இல்லன்னா... பஞ்சாபிடம் சத்தியமா தோற்றிருப்போம்.. யாரை சொல்கிறார் தல...?

சென்னை:பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற, ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சே காரணம் என்று சென்னை கேப்டன் தோனி கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாட்சன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அரைசதம் அடித்த டுபிளெசிஸ் மற்றும் ரெய்னா ஆகிய இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் அஸ்வின் வீழ்த்தினார். பின்னர் தோனியும் ராயுடுவும் மிடில் ஓவர்களில் நிதானம் காட்டினர்.

இறுதி ஓவர்களில் ஆட்டம்

இறுதி ஓவர்களில் ஆட்டம்

வழக்கம்போலவே டெத் ஓவர்கள் வரை நிதானமாக இருந்த தோனி, கடைசி 2 ஓவர்களில் அடித்து ஆடி ரன்களை உயர்த்தினார். 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 160 ரன்கள் எடுத்தது.

திருப்புமுனை பவுலிங்

திருப்புமுனை பவுலிங்

161 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் கெய்ல் மற்றும் மயங்க் அகர்வாலை அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தி ஹர்பஜன் சிங் திருப்புமுனையை ஏற்படுத்தினார். பின்னர் ராகுலும் சர்ஃபராஸ் கானும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர்.

சென்னை வெற்றி

சென்னை வெற்றி

ஆனால் அந்த அணி 138 ரன்களை மட்டுமே எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் வென்ற சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

ஆட்டம் முடிந்த பிறகு பேசிய தோனி, அணியின் வெற்றிக்கு ஹர்பஜன் பந்து வீச்சு முக்கிய காரணம் என்றார். அவர் கூறியதாவது: யுனிவர்ஸ் பாஸ் கெய்லை தொடக்கத்திலேயே அவுட்டாக்கிவிட்டோம்.

ஸ்கோர் கிடையாது

ஸ்கோர் கிடையாது

அவர் மட்டும் அதிரடியாக ஆடியிருந்தால், 200 ரன்கள் அடித்திருந்தால் கூட வெற்றி பெற முடியாது. 160 ரன்கள் என்பது போதுமான ஸ்கோர் கிடையாது. ஆனாலும், கெய்ல், மயங்க் அகர்வால் இருவரையும் விரைவிலேயே வீழ்த்தினார் ஹர்பஜன் சிங்.

முக்கியமானது

முக்கியமானது

அவர் வீழ்த்திய அந்த இரண்டு விக்கெட்டுகள் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமானது. அந்த விக்கெட்டுகள் மட்டும் விழாவிட்டால், 160 ரன்கள் என்பது பெரிய ஸ்கோரே அல்ல, அணி தோல்வியை சந்தித்திருக்கும் என்று கூறினார்.

ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்
Match 31 - June 24 2019, 03:00 PM
வங்கதேசம்
ஆப்கானிஸ்தான்
Predict Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
MS Dhoni praises Harbhajan Singhs bowling against kings xi punjab.
Story first published: Sunday, April 7, 2019, 14:46 [IST]
Other articles published on Apr 7, 2019
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more