Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத "சாதனை நாயகன்" டோணி !

டெல்லி: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு சாதனை நாயகனின் பெயர் டோணி. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 50-க்கும் அதிகமான போட்டிகளில் கேப்டனாக இந்திய அணியை வழி நடத்திய சாதனை நாயகனாக திகழ்ந்த ஒரே வீரர் டோணி.

கால்பந்தாட்டத்தில் விருப்பமுடைய டோணி, 1999-2000மாவது ஆண்டில், தனது 18வது வயதில், ரஞ்சி கோப்பை தொடரில், பீகார் அணிக்காக டோணி களமிறங்கினார். 2004 டிசம்பர் 23ம் தேதி, வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டோணி முதல்முறையாக இந்தியாவுக்காக களம் கண்டார்.

MS Dhoni resigns as India's limited overs skipper: Captaincy era comes to an end

2005 டிசம்பர் 2ம் தேதி, இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக களமிறங்கினார். விக்கெட் கீப்பராக அணிக்குள் வந்து, 2007ல் இந்திய டி20 அணி அணிக்கு கேப்டனாக்கப்பட்டு, அந்த டி20 உலக கோப்பையை வென்றார்.

டோணி கேப்டனாக இருந்தபோது இந்திய டெஸ்ட் அணி நெ.1 இடத்தைப் பிடித்தது. அதிக சர்வதேச போட்டிகளில் கேப்டனாக இருந்த வீரர் டோணி, டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் சேர்த்து 331 போட்டிகளில் கேப்டனாகப் பணியாற்றியுள்ளார்.

இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் டோணி, இதுவரை 199 ஒருநாள் போட்டிகளிலும் 72 டி20 போட்டிகளிலும் இந்திய அணியை வழிநடத்திச் சென்றுள்ளார். 199 ஒருநாள் போட்டிகளில் டோணி தலைமையிலான இந்திய அணி 110-ல் வென்று 74 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது. அதேபோல் 72 டி20 போட்டிகளில் இவரது தலைமையின் கீழ் இந்திய அணி 41 போட்டிகளில் வென்று 28-ல் தோற்றுள்ளது.

கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் 6,633 ரன்களை 54 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார் டோணி. ஸ்ட்ரைக் ரேட் 86. டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக டோணி 112 ரன்களை 122.60 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.

டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, உலக கோப்பை ஆகிய மூன்றையும் வென்ற ஒரே கேப்டன் டோணி. விளையாட்டு துறைக்கான மிக உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை 2007-08ல் இவர் பெற்றுள்ளார். பிரிட்டனின் டி மோன்ட்போர்ட் பல்கலைக்கழகத்தின் சார்பாக 2012ல் டோணிக்கு டாக்டர் பட்டம் தரப்பட்டது. 2011ல், எல்லை பாதுகாப்பு ராணுவ பிரிவின் சார்பில், கவுரவ பதவி வழங்கப்பட்டது.

கேப்டனாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய டோணி திடீரென விலகுவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் இந்திய அணியில் தொடர்ந்து டோணி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, January 5, 2017, 1:32 [IST]
Other articles published on Jan 5, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+