Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MS Dhoni Retirement - தோனி ஓய்வு பெற்ற நாள் இன்று.. மீண்டும் இன்று ஒரு அறிவிப்பு வெளியாகுமா?

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கிறது. கொரானா உச்சத்தில் இருந்த காலத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது

ஆகஸ்ட் 15ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு எப்போதும் போல் சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டு ரசிகர்கள் வீட்டில் இருந்தனர். அப்போது மாலை தோனி திடீரென்று ஒரு டிவீட்டை போட்டார். அதில் மாலை 7: 29 மணியிலிருந்து தாம் ஓய்வு பெற்றுவிட்டதாக அவர் அறிவித்தார்.

ms dhoni csk ipl 2025

இது ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.தோனி ஓய்வு பெற்ற சிறிது நேரத்திலே அவருடைய உற்ற நண்பருமான சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு முடிவை அறிவித்தார். இதனால் ஆகஸ்ட் 15ஆம் தேதி வந்தாலே தோனி ஓய்வு பெற்ற நாள் ஆச்சே இன்று ரசிகர்கள் கண்களை கசக்கி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தோனிக்கு தற்போது 43 வயது ஆகிறது.

தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஏற்கனவே தோனி மூட்டு வலி பிரச்சனை இருப்பதால் அவர் பெரிய அளவில் பேட்டிங் செய்ய வருவதில்லை. அடுத்த சீசன் விளையாடுவாரா என்பது குறித்தும் தோனி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ms dhoni csk ipl 2025

இந்த சூழலில் தான் தோனி ஓய்வு பெற்று நான்காண்டுகள் ஆகிவிட்டது என்பதால் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாத வீரராக கருத வேண்டும் என சிஎஸ்கே கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இந்த ஐடியாவை கொடுத்து குறைந்த ஊதியத்தில் சிஎஸ்கே அணிக்காக மீண்டும் ஒரு சீசன் விளையாடலாம் என தோனி முடிவெடுத்திருந்தார்.

ஆனால் அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் தோனி அந்த முடிவை கைவிட்டு விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்தும் தோனி ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆகஸ்ட் 15ஆம் தேதி தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வருவதால் தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்று விடுவார் என்று ரசிகர்கள் பயத்திலே உள்ளனர்.

Story first published: Thursday, August 15, 2024, 7:15 [IST]
Other articles published on Aug 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+