For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக திரும்புகிறாரா தோனி? தல சொன்ன இந்த வார்த்தையை கவனீங்க?

மும்பை: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை கோப்பையை கைப்பற்றியிருக்கிறது. கடைசியாக 2023 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி குஜராத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால்,அடுத்த இரண்டு சீசன் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் தவித்து வருகிறது.

குறிப்பாக கடைசி சீசனின் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் முதன் முறையாக பத்தாவது இடத்தில் நிறைவு செய்தது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்கனவே செய்யப்பட்டு வருகிறது.

MS Dhoni

பல வீரர்கள் காயம் அடைந்த நிலையில் புதிய வீரர்களை தேர்வு செய்து அணியில் இருந்த குறைகளை சிஎஸ்கே அணி நிவர்த்தி செய்துவிட்டது. இந்த தருணத்தில் தல தோனி சென்னை அணியில் மீண்டும் வருவாரா மாட்டாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. இதற்கு தோனி எப்போதுமே என்னுடைய உடல் தகுதி என்ன சொல்கிறதோ அதை பொறுத்துதான் முடிந்தெடுப்பேன்.

கவனத்தை ஈர்த்த தோனியின் பதில்:

அதற்கு இன்னும் சில காலம் இருக்கிறது என்ற பதிலையே சொல்லி வருகிறார். இந்த தருணத்தில் தற்போது தோனி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது புதியதாக ஒன்று சொன்னார். அதுதான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. நிகழ்ச்சி ஒன்று பேசும்போது, நானும் சிஎஸ்கேவும் எப்போதும் ஒன்றாக தான் இருப்போம்.

என்னால் அடுத்த 15-20 ஆண்டுகள் கூட சிஎஸ்கே அணி உடன் பயணிக்க முடியும். ஆனால் நான் 15- 20 வருடங்கள் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேன் என அவர்கள் நினைக்க வேண்டாம். ஆனால் கண்டிப்பாக நான் இருப்பேன். ஒரு ஆண்டா இல்லை இரண்டு ஆண்டா என்பதெல்லாம் என்னை பொறுத்தவரையில் விஷயம் கிடையாது.

பயிற்சியாளராக வருகிறாரா தோனி?

நான் எப்போதுமே மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்துதான் அமர்ந்திருப்பேன். ஆனால் நான் விளையாடுவேன் என்பது தெரியாது. உங்களுக்கு அதைப் பற்றி தெரியும் என நான் நம்புகிறேன். கடைசியாக இரண்டு ஆண்டுகள் எங்களுக்கு சரியான தொடராக அமையவில்லை. ஆனால் நாங்கள் தவறிலிருந்து பாடம் கற்று வருகிறோம் என்று கூறினார். தோனியின் இந்த பேச்சு மூலம் அவர் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக திரும்ப வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Story first published: Thursday, August 7, 2025, 10:26 [IST]
Other articles published on Aug 7, 2025
English summary
MS Dhoni reveals He Will be with CSK for another 15-20 Years
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+